சென்னை:

சென்னை விமானநிலைய விரிவாக்கம் பேஸ்-1, 2020ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்றும், சென்னை சர்வதேச விமான நிலைய  சி. வி. தீபக் தெரிவித்து உள்ளார்.

சென்னை விமான நிலையம் தற்போது சர்வதேச விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு  சென்னை விமான நிலையயம் விரிவாக்கம் பணிக்காக டூ.  46 2,467 கோடி ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற  இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த சென்னைன்ஃப்ராவின் 4 வது பதிப்பில் சென்னை விமான நிலைய இயக்குனர் சி. வி. தீபக் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,.

சென்னை விமான நிலையத்தின் கட்டம் 1 விரிவாக்கம் 2020 க்குள் நிறைவடையும்.அதைத் தொடர்ந்து, , சர்வதேச போக்குவரத்து இயக்கத்தை கவனித்துக்கொள்வதற்கான புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடமான டி 2 க்கு வழி வகுக்கும் என்றார்.

விமான நிலைய  விரிவாக்கத்திற்குப் பிறகு, தற்போது செயல்பாட்டில் இருக்கும் முனையங்களை இடிப்பது தொடங்கும். பிப்ரவரி 2022ம் ஆண்டு 4032 விமானங்களின் போக்குவரத்தை கையாளும் திறன் கொண்ட ஒருங்கிணைந்த முனையம்  அமைக்கும் பணி தொடங்கும். இது 2032-2035க்குள் முடிவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

தற்போது சென்னை விமான நிலையத்தில்,  போக்குவரத்து 35-40 மில்லியனாக மதிப்பிடப்படு வதால், இரண்டாவது விமான நிலையத்திற்கு  முக்கிய தேவை உள்ளது” . “இரண்டாவது விமான நிலையத்தைப் பொறுத்தவரை, விமான நிலைய உள்கட்டமைப்பைப் பார்ப்பது மட்டுமல்லாமல், நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ ரயில் இணைப்பு உள்ளிட்ட விமான நிலையத்திற்கான கூடுதல் உள்கட்டமைப்புகளையும் பார்ப்பது முக்கியம்.

தற்போதுள்ள விமான நிலையத்தில் 15 மில்லியனுக்கும் அதிகமான போக்குவரத்தை கையாளும் திறன் உள்ளது, ஆனால் கடந்த ஆண்டு (2019 நிதியாண்டு) இது 22 மில்லியனைத் தொட்டது, இது தற்போதுள்ள உள்கட்டமைப்புக்கு அதிக அழுத்தம் கொடுத்தது, என்றார்.

நவம்பர் வரை, விமான நிலையம் ஏற்கனவே 15 மில்லியன் பயணிகளைக் கையாண்டது, இந்த நிதியாண்டு 22 மில்லியனைக் கடக்கும் என்று  எதிர்பார்ப்பதாக கூறியவர்,  அடுத்த 6-8 மாதங்களில், விமான நிலையத்தால் பிரதான கட்டிடத்திலேயே இரவு நேர பயணிகள் போக்கு வரத்தை கையாள முடியும் வகையில் வசதிகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.