பிஎப் வட்டி 3 மாதத்துக்கு குறைப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

Must read

சென்னை: வருங்கால வைப்பு நிதியில் வட்டி 3 மாதத்திற்கு குறைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான நிதி ஆதாரங்களை மத்திய அரசு, மாநில அரசுகள் திரட்டி வருகின்றன. அகவிலைப்படி உயர்வு நிறுத்தம், ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைப்பு என ஏற்கனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந் நிலையில், வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிஎப் வட்டி இனி அடுத்த 3  மாதத்திற்கு குறைப்படுவதாக மத்திய அறிவிப்பு விடுத்திருந்தது. அதில், பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக 3மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு குறைத்துவிட்ட நிலையில், அதன் முன்னோட்டமாக  தமிழக அரசும் அரசாணையை வெளியிட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article