ரஜினிகாந்த் நடிப்பில் அமெரிக்காவில் வெளியாகியுள்ள பேட்ட திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் நாளில் ரூ.3.10 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

petta

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் படம் ‘பேட்ட’. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இத்திரைப்படத்தின் டீசல் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்ற நிலையில், திரைப்படம் வெளியாகும் தேதி ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பேட்ட திரைப்படம் இன்று வெளியாகி பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை படைத்துள்ளது. பேட்ட திரைப்படம் அமெரிக்காவில் முதல் நாளில் 557 ஆயிரம் டாலர்கள் (ரூ.3.10 கோடி) வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட திரைப்படம் அமெரிக்காவில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 209 இடங்களில் வெளியாகியது. இதன் காரணமாக முதல் நாளில் அதிக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

இனி வரும் நாட்களிலும் படத்தின் வசூல் நிலவரம் தொடர்ந்து அதிகரிக்கும் என அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் கருதுகின்றன.

[youtube-feed feed=1]