சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் உள்பட மாநிலம் முழுவதும் பெட்ரோல் விலை ரூ.,100ஐ தாண்டியுள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரும் அவதிக்குளாகி வருகின்றனர். சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து பெட்ரோல் விலை 100 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் லிட்டருக்கு 100ஐ தாண்டியது. தமிழகத்தில் கடந்தவாரம் கொடைக்கானல் பகுதியில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டிய நிலையில், தொடர்ந்து கடலூர் மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனையாகி வந்தன.
இந்த நிலையில், இன்று சென்னையில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்துள்ளது. நேற்று சென்னையில் பெட்ரோல், லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று பெட்ரோல் விலை 33 காசுகள் அதிகரித்து லிட்டர் 100.13 ரூபாய்க்கும், டீசல் விலை மாற்றம் ஏதும் இன்றி கடந்த நான்கு நாட்களாக 93 ரூபாய் 72 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது… மத்தியஅமைச்சசரின் தான்தோன்றித்தனமான விளக்கம்…