சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள பழமை வாய்ந்த கோயில்மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசினார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனேவ கடந்த இரு வாரத்துக்கு முன்பு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது நினைவிருக்கலாம்.

சென்னை பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவீரபத்ரசாமி கோயில். இந்த கோயிலின்மீது,  மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்த நிலையில், அந்த நபர் மதுபோதையில் குண்டு வீசியதாகவும்,   சாமி தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்ற கோபத்தில் பெட்ரோல் குண்டு எறிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் குண்ட வீசியவரின் பெயர்  முரளி கிருஷ்ணன் என்பவதாகவும், அவரிடம் நடத்தப்பட்ட  முதற்கட்ட விசாரணையில் மது போதையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்து உள்ளனர்.  மேலும் முரளி கிருஷ்ணன் மீது குற்ற வழக்குகளும் நிறைய உள்ளன, சிறையில் இருந்து வெளியில் வந்ததும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோவில் கருவறைக்குள் சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக அர்ச்சகர் உமா சந்திரன் தெரித்துள்ளார். திமுக ஆட்சியில் அடுத்தடுத்து கோவில்கள் இடிக்கப்படுவதும்,  குண்டு வெடிப்புகள் நடத்தப்படுவதும் தமிழக மக்களிடயே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

கடந்த வாரம் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியவரை மதுபோதையில் வீசியதாக காவல்துறை தெரிவித்த நிலையில், தற்போது கோயில்மீது பெட்ரோல் குண்டு வீசியவரையும் மதுபோதையில் வீசியதாக காவல்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.