சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சப்பட்ட வழக்கை கையில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கு தொடர்பாக, 680 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
2023ம் ஆண்டு ஆண்டு அக்டோபர் மாதம் ஆளுநர் மாளிகை முன்பு கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டை வீசினான். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, நீட்டுக்கு எதிராக பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் வெளியானது. இந்த விஷயத்தில் காவல்துறை வேறு வகையான விளக்கத்தை அளித்தது.
கருக்கா வினோத் பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை மீது வீசவில்லை, கேட்டுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த தடுப்பு பலகை(பேரிகார்டு) மீதுதான வீசினான் என்று கூறி வீடியோவை வெளியிட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சங்கர் ஜிவால் பேசுகையில், ஆளுநர் மாளிகையில் எந்த குறைபாடும் இல்லை. ரௌடி கருக்கை வினோத் ஆளுநர் மாளிகை பகுதியில் தனியாக நடந்து வந்ததகாகவும் அவருடன் யாரும் வரவில்லை. சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு அரசியல் பின்னணி உள்ளதா என்பதை விசாரணைக்கு பின்னரே தெரிவிக்க முடியும் என கூறியிருந்தார். டிஜிபியின் இந்த விளக்கம் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக, என்ஐஏவும் விசாரணை நடத்தியது. மேலும், வழக்கு தொடர்பாக விசாரிக்க கருக்கா வினோத்தை காவலில் எடுக்க முயற்சித்த நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் நீதிமன்றமும் விசாரணைக்கு அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் வெடிபொருள் பொருள்கள் சட்டம் 1908 இன் பிரிவுகள் 3,4 மற்றும் 5, தமிழ்நாடு சொத்து (சேதங்கள் மற்றும் இழப்புகள் தடுப்பு) சட்டம் 1992 இன் பிரிவு 4 மற்றும் ஆளுநரை தாக்க முயற்சித்தல் ஆகிய பிரிவுகளில் கருக்கான வினோத் மீது 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளது.