கோவை: மத விவகாரத்தில் கோவை எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில், ராஜாவின் இந்து விரோத பேச்சு, அவரை எச்சரித்த பாஜக மாவட்ட தலைவர் கைது போன்றவற்றால் மீண்டும் கோவை மாவட்டம் தகதகவென தகித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், என்ஐஏ சோதனை, இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம், வன்முறை தொடர்ந்த நிலையில், நேற்று இரவு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவமும் மேலும் பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது. இதையடுத்து கோவை முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று மாலை கோவை கணபதியில் இருந்து கோவைப்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
காந்திபுரத்தில் இருந்து நரசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது, கல் வீசியதில் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கோவை வி.கே.கே மேனன் சாலையில் அமைந்துள்ள கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி எறிந்தனர்.
கோவை , பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
2 கார், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது .
பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்ட்டுள்ளது.துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்
கோவை பதற்றத்துக்கு காரணம் என்ன?
இந்துக்கள் குறித்த திமுக எம்.பி. ராசா பேசிய விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் கொடுத்தும், காவல்துறை ராசாமீது வழக்கு பதிவு செய்யவோ, விசாரணை நடத்தவோ முன்வரவில்லை. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் ராசாவை விமர்சித்து கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கோவையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ராசாமீது நடவடிக்கை எடுக்காத, தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும், ஆ ராசா குறித்தும் இழிவாக விமர்சித்தார். இதையடுத்து, காவல்துறையின்ர ராமசாமி மீது வன்கொடுமை சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு உருவபொம்மை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர்களை கைது செய்த காவல்துறையினர் பலரை சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நேற்று தேசிய புலனாய்வு முகமை, கோவை உள்பட நாடு முழுவதும் அதிரடி வேட்டையாடியது. இதில் இஸ்லாமிய அரசியல் அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களோடு தொடர்பில் இருப்பதாக கூறி பலரை கைது செய்த டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ் இஸ்மாயில் அழைத்து செய்யப்பட்டுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் கரும்பு கடை பகுதியில் சாலை தடுப்புகளை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை காவல்துறையின்ர வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து நேற்று மாலை கணபதியில் இருந்து கோவைப்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. காந்திபுரத்தில் இருந்து நரசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது, கல் வீசியதில் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில், கோவை வி.கே.கே மேனன் சாலையில் அமைந்துள்ள கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி எறிந்தனர். அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போன்று கோவை ஒப்பணக்காரர் வீதி பகுதியில் செயல்பட்டு வரும் மாருதி டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடையின் மீதும் மர்ம நபர்கள் திரியுடன் மண்ணெண்ணெய் குண்டை வீசி சென்றனர். இது தொடர்பான தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த வெரைட்டி ஹால் ரோடு போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை , பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. 2 கார், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது .பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்ட்டுள்ளது.துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்
இதனால் கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கோவை மாநகர் முழுவதும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததுமுதல் காவல்துறை செயலிழந்து விட்டதாக எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வரும் நிலையில், கோவை சம்பவமும் அதை நிரூபித்துள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் திமுக எம்.பி. ராசாவின் கீழ்த்தரமான பேச்சால் மக்கள் கொந்தளிப்பான நிலையில் இருந்து வரும் நிலையில், கோவை போன்ற முக்கியமான இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய காவல்துறை, அதை கவனிக்காமல் கோட்டை விட்டுள்ள தாலேயே கோவையில் கலவர சூழல் உருவாகி உள்ளது.