சென்னை
தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. இதனால் தினமும் பெட்ரோல் மற்றும் டீச ல்விலையில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது.
மக்களவை தேர்தல் நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறாமல் இருந்ததால் மக்கள் சற்று நிம்மதியாக இருந்தனர். மக்களவை தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்றைய அறிவிப்பின்படி சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட லிட்டருக்கு 9 காசுகள் அதிகரித்து இன்றைய விலை ரூ.97.59 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்து இன்றைய விலை ரூ.70.50 ஆக உயர்ந்துள்ளது.
தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் கடும்கலக்கம் அடைந்துள்ளனர்.