சென்னை:
சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்து கிருஷ்ணகிரி டிஎஸ்பி சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் கொடுத்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் தாக்கல் செய்த இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]