மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வர உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்துஅமைப்பு தலைவர் ராம.ரவிக்குமார், அரச பாண்டி ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இதுதொடர்பாக மலை உச்சிக்கு சென்று ஆய்வு நடத்தியதுடன், பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்து. மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

ஆனால், திமுக அரசை நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. மேலும் காவல்துறையை குவித்து வேண்டத்தகாத வகையில், பதற்றத்தை உருவாக்கி சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் மதுரை பகுதியில் பதற்றம் உருவானது. மேலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், மறுநாள் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் மனுதாரர்கள் தீபம் ஏற்ற நீதிபதி மீண்டும் உத்தரவிட்டார். ஆனால் அதையும் திமுக அரசு தடை செய்தது. அதன்படி தீபம் ஏற்றச் சென்ற மனுதாரர்கள், திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை அமலில் இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். பின்னர் 144 தடையாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக திமுக அரசை நீதிமன்றம் கடுமையாக சாடியது. இதையடுத்து நீதிமனற உத்தரவை நிறைவேற்றாத ஆட்சியர், காவல்துறை தலைவர், தலைமை செயலாளர்கமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசின் அடிமைகளாக செயல்பட்டு, நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததால், தொடர் நீதிமன்ற அவமதிப்பு புரிந்ததாகக் கூறி மதுரை ஆட்சியர் பிரவீன்குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ன நாராயணன், துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி மனுதாரர்களில் ஒருவரான அரச பாண்டி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அந்த மனுவில், “நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அவமதிப்பு செய்ததற்காக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது அகில இந்தியப்பணி விதிகள் (நடத்தை) 1968-ல் அடிப்படையில் துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.
[youtube-feed feed=1]