சென்னை: புனித தேவசகாயம் பிள்ளையின் புனிதர் பட்டம் நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றி  தெரிவிப்பதாக சிறுபான்மை ஆணைய தலைவர்  பீட்டர் அல்போன்ஸ் டிவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளை 1712ம் ஆண்டு ஏப்ரல் 23ந் தேதி பிறந்தவ்ர். இவர் திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவின் அரசவையில் பணியாற்றினார். பின்னர்  கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.  1745ம் ஆண்டில், அவர் ஞானஸ்நானம் பெற்ற உடனேயே, அவர் ‘லாசரஸ்’ என்ற பெயரைப் பெற்றார்.   இதனால், திருவிதாங்கூர் அரசின் கோபத்தை எதிர்கொண்டார். பின்னர் கடுமையான துன்புறுத்தல் மற்றும் சிறைவாசத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இறுதியில் அவர் 1752-ல் கொல்லப்பட்டார்.

இவரை புனிதராக அறிவிக்க வேண்டும் என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கோரிக்கையை ஏற்று, வாடிகன் நகரம் அவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பதாக கடந்த 2020ம் ஆண்டு  அறிவித்தது. அப்போது, “அவருடய மதமாற்றம் அவருடைய சொண்த ஊரின் மதத்தின் தலைவர்களுடன் ஒத்துப்

போகவில்லை. அவர் மீது தேசத்துரோகம் மற்றும் உளவு பார்த்ததாக பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் அரசு நிர்வாகத்தில் இருந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார்” என்று வாட்டிக்கன் வெளியிட்ட குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த  2004-ம் ஆண்டில், கன்னியாகுமரியில் உள்ள கோட்டார் மறைமாவட்டமும், தமிழ்நாடு பிஷப்ஸ் கவுன்சிலும் (டி.என்.பி.சி) மற்றும் இந்திய கத்தோலிக்க பிஷ்ப்களின் மாநாடு (சி.சி.பி.ஐ) ஆகியவையும் இணைந்து தேவசகாயத்தை வாட்டிகனுக்கு முக்தியடைந்தவராகப் பரிந்துரைத்தன. அவர் புனிதர் பதவிக்கு தகுதியானவர் என கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாட்டிக்கன் அறிவித்தது. அத்துடன்,  அவருடைய பெயரிலிருந்து ‘பிள்ளை’ என்பதை நீக்கி, அவரை ‘ஆசீர்வதிக்கப்பட்ட தேவசகாயம்’ என்று குறிப்பிட்டனர்.

இதையடுத்து,  மறைந்த தேவசகாயம் பிள்ளைக்கு 15 மே 2022 அன்று வாடிகனில் புனிதர் பட்டம் அளிக்கப்படுறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகஅரசு சார்பில், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர் மனோ தங்கராஜ் உள்பட பலர் செல்கின்றனர்.

இந்தநிலையில்,  புனித தேவசகாயம் பிள்ளையின் புனிதர் பட்டம் நிகழ்வுக்காக தமிழக அரசின் பிரதிநிதிகளாக நானும் மாண்புமிகு அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ரோம் நகர் வத்திக்கான் செல்கிறோம். அரசு முறை பயணத்தை அனுமதித்து புனிதருக்கும், தமிழக கிறிஸ்தவத்துக்கும் புகழ் சேர்த்த முதல்வருக்கு நன்றி  என பீட்டர் அல்போன்ஸ் டிவிட் பதிவிட்டுள்ளார்.