சென்னை:
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கூடாது என்று ஒரு கடிதத்தை டிஜிபிக்கு அனுப்புகிறேன் என்று ஓய்வு பெற்ற டிஜிபிக்கு கடிதம் எழுதி பீட்டா அமைப்பினர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக களம் இறங்கிய பீட்டா அமைப்பினர் அமெரிக்க பெரு நிறுவனங்களின் கைகூலிகள் ஆவர். சர்வதே அளவில் நுனிப் புல் மேயும் அறைகுறை புத்திசாலிகளை, மேல்தட்டு விளம்பர பார்ட்டிகளை பிடித்து கொண்டு வளம் வரும் அமைப்பு இது.
இந்தியாவில் உள்ள காளை இனங்களை அழித்தால், பால் உற்பத்தி , விவசாயத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை கால் ஊன்ற முயற்சித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக தடை பெற்றுள்ள பீட்டாவில் சினிமா நடிகர் நடிகைள் உள்ளிட்ட பல பிரபலங்கள் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் லட்சகக்கணக்கான மாணவர்கள் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் போராட்டம் புதிய மாற்றம் ஏற்பட்டு அது பெரும் தீயாக பரவ தொடங்கிவிட்டது. இதனால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த மக்கள் தயாராகிவிட்டனர்.
தடையை மீறுவதை தடுக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது பீட்டா. இதே போல் தமிழக டிஜிபிக்கும் கடிதம் எழுதுவதாக நினைத்துகொண்டு ஓய்வுபெற்ற டிஜிபி அஷோக்குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அஷோக்குமார் ஓய்வு பெற்று பல மாதங்கள் ஆகிறது. தற்போதைய டிஜிபியாக இருப்பவர் டி.கே.ராஜேந்திரன். இது கூட தெரியாத கூமுட்டைகளான பீட்டா தமிழக வீடுகளில் வளர்க்கப்படும் காளைகளை துன்புறுத்துவதாக போராடுகின்றனர். இதுதான் இவர்கள் அறிவு என சமூக வலைதளங்களில் விமர்சனமாகியுள்ளது.