திருக்கழுகுன்றம்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்த துரைதனசேகரன் என்பவர் காவல்துறையில், தங்களது பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையில் ஆதாரத்துடன் புகார் அளித்துவிட்டு திரும்பியபோது, மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த புகார் கொடுத்த நபர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் மாநில செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புகார் கொடுத்தது தொடர்பான தகவலை, கஞ்சா வியாபாரி களிடம் காவல்துறையினரே தெரிவித்ததாகவும், அதனால்தான் புகார் கொடுத்துவிட்டு திரும்பும் வழியிலேயே, அதாவது அடுத்த அரைமணி நேரத்திற்குள் தாக்கப்பட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் நடமாட்டம் சகஜமாக நடைபெறுகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக டிஜிபி அவ்வப்போது கூறி வந்தாலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கஞ்சா விற்பனையை அரசியல் கட்சியினரே செய்து வருகின்றனர். இதனால், சென்னை உள்பட பல பகுதிகளில் கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் பயந்து வருகின்றனர். பல பகுதிகளில் கஞ்சா விற்பனை குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தால், புகார் கொடுத்தவர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. புகார் கொடுப்பவர்களின் தகவலைகளை வெளியே தெரிவிக்காமல் தடுக்க வேண்டிய காவல்துறையினரே, புகார் கொடுப்பவர்கள் குறித்து சமூக விரோதிகளிடம் தெரிவிக்கும் நிலை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்தா,ன  செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் வீடியோவை பா.ஜ.க நிர்வாகி தனசேகர் பதிவிட்டுள்ளார். மேலும், திருக்கழுகுன்றம் காவல் நிலையத்திற்கும் சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், காவல்துறையினர் கஞ்சா வியாபாரிகளுடன், புகார் கொடுத்த நபரையும் சேர்த்து வழக்கத்துக்கு மாறாக விசாரணை நடத்தி உள்ளது.

இதையடத்ரது, கஞ்சா வியாபாரிகளின் ஆட்சிகள், காவல்நிலையத்தை விட்டு வெளியே வந்த தனசேகரை சரமாரியாக தாக்கி, ரத்தக்காயம் ஏற்படுத்தி உள்ளனர். இதைகண்ட அந்த பகுதிமக்கள் ஓடிவரவே, மர்ம நபர்கள் அங்கிருந்து  ஓடி விட்டனர். இதுமட்டுமின்றி,  தனசேகர்  இனோவா கார் கண்ணாடியையும் மர்ம கும்பல்  உடைத்துள்ளது.

ரத்த வெள்ளத்தில் இருந்த தனசேகரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சிலர் அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து கலைந்துசெல்ல எச்சரிதத்தனர். இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கூடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கஞ்சா கும்பலுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு வருவதாக புகார் கூறும் அப்பகுதி பொதுமக்கள், டிஜிபி கஞ்சா வேட்டை 2.03., 3.0 என படத்துக்கு பெயர் வைப்பதுபோல கூறி வருகிறார், ஆனால் நிஜத்தில் ஒன்றுமே நடைபெறவில்லை. கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. புகார் கொடுப்பவர்கள் இதுபோன்று தாக்கப்பட்டால், யார்தான் புகார் கொடுக்க முன்வருவார்கள் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுகுறித்து கூறிய அந்த பகுதி பாஜக நிர்வாகி ஒருவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என்றும், காவல்துறையினர் அவர்களிடம் மாமூல் வாங்கிக்கொண்டு, மக்களுக்கு விரோதமாக, கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால், மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்து உள்ளனர்.