காவல் நிலையத்தை திறந்து வைத்தவருக்கு அதே காவல் நிலையத்தில் கவனிப்பு…

Must read

பீகார் மாநிலத்தின் முஸாபர்பூர் காவல் நிலையத்திற்கு வியாழன் அன்று இரவு சுதிர் குமார் என்பவர் சென்றார்.

அங்கு போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரர் கிஷன் குமாரை விடுவிக்கும்படி கூறியதை அடுத்து போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

சுதிர் குமார்

இதனைத் தொடர்ந்து அந்த பகுதி உதவி காவல் துறை அதிகாரியிடம் சுதிர் குமார் புகாரளித்தார், பின்னர் செய்தியாளரிடம் கூறிய அவர் இதே முஸாபர்பூர் காவல் நிலையத்தை திறப்பதற்காக என்னை சிறப்பு அழைப்பாளராக காவல் துறையினர் அழைத்திருந்தனர்.

ஆனால், இன்று இதே காவல் நிலைய அதிகாரிகள் என்னை தாக்கியுள்ளனர். உயரதிகாரியிடம் முறையிட்டுள்ளேன் அவர் நியாயமான விசாரணை மேற்கொள்ளப் படும் என்று உறுதியளித்துள்ளார் என்று கூறினார்.

இந்த சுதிர் குமார் வேறு யாரும் அல்ல, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரும் அவருக்காக எல்லா ஊர்களுக்கும் சென்று அரங்கத்தில் இருந்து உற்சாகப்படுத்தி பிரபலமானவர்.

போலி ஆவணங்கள் மூலம் நில விற்பனை செய்த விவகாரத்தில் சாட்சி கையெழுத்து போட்டது தொடர்பாக இவரது சகோதரர் கிஷன் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

More articles

Latest article