மும்பையில் 20மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து! 2பேர் பலி…

Must read

மும்பை: மும்பையில் 20மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில்,  2பேர் பலி உள்ளதாகவும் ஏராளமானோர் காயமடைந்து இருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை டார்டியோ பகுதியில்  20 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த  கட்டிடத்தில்  இன்று காலை 7.28 மணியளவில் 18வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை அணைக்கும் பணியில் 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஏழு நீர் ஜெட்டிகள் ஈடுபட்டுள்ளன.

இந்த தீவிபத்தில் சிக்கி 2 பேர் பலியான நிலையில், 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் இது நிலை -3 (பெரிய) தீ விபத்து என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

More articles

Latest article