ஈரோடு:
காவிரி விவகாரத்தில் தமிழக எம்பிக்கள் பதவி விலக வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “காவிரி விவகாரத்தில் சுமூகமான நிலை எட்டப்படாவிட்டால் தமிழக எம்பிக்கள், தங்கள் பதவியை விட்டு விலக வேண்டும்.
திரைப்படத்தில் கிடைத்துள்ள புகழ் அரசியலுக்கு போதாது.
சிலைகளை வைப்பதிலேயே வித்தியாசமான கருத்துடையவன் நான். அதிலும் வைத்த சிலையை இடிப்பது என்பது தவறு. பெரியார் இருந்திருந்தாலும் தனக்கு சிலை வைப்பதை அவர் விரும்ப மாட்டார்.
மதியம் 12 மணிக்கு கூட நடந்து செல்லமுடியாது என்ற அளிவில்தான் தற்போது மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு இருக்கிறது.
ஜிஎஸ்டி விவகாரத்தில் திரைத்துறையில் இருந்து எனது குரல்தான் முதலில் ஒலித்தது” என்றார்.