சென்னை: திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டி என்னார்.

தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி பெரியார் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்திய   ஈ.வெ.ராமசாமியின் 52 ஆவது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பெரியாரின் சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்போடி கே.பழனிசாமி தனது எக்ஸ் பக்க பதிவில், ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் சுட்டெரித்த பேரொளி, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி, திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று, மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]