சென்னை:
பெரியார் சிலை அகற்றப்படும் என முகநூலில் பதிவிட்ட எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திராவிட கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், ழுப்புரம் மாவட்டை காவல் துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பபடுவது போல தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக தலைவர் தமிழிசையோ, ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை.. அது அவரது சொந்த கருத்து என கூறியிருந்தார்.
மேலும் சமூக வலைதளங்களிலும் எச்.ராஜாவின் கருத்துக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், தனது தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற தனது கருத்தை பேஸ்புக்கிலிருந்து நீக்கினார்.
இந்நிலையில், எச்.ராஜா மீது வழக்குப்பதியக் கோரி வழக்கு தொடரப்பட்டது. திராவிடர் விடுதலைக்கழகத்தின் ஜெயரட்சகன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரிக்க நீதி மன்றம், விழுப்புரம் கண்காணிப்பாளர் மற்றும் கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.