சென்னை: பெரியாரின் பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழர்கள் வரலாற்றில் ‘பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின் என்று வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலை மற்றும் உருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் மரியாதை செய்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் முதல்வர் உள்பட அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். அதுபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செய்தனர்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் டிவிட் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அவரது பதிவில்,
பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்!
புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்!
“பெரியாருக்கு முன்” “பெரியாருக்குப் பின்” என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.