சென்னை:

டிகர் விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தனது குணச்சித்திர மற்றும் யதார்த்த நடிப்பின்மூலம் தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்து இருப்பவர் விஜய்சேதுபதி. இவருக்கு அவரது ரசிகர்கள் மக்கள் செல்வன் என்று அடைமொழியிட்டுள்ளனர்.

சமீபதில் நிறுவனம் ஒன்றிற்கு விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்ட விஜய்சேதுபதி, அவருக்கு கொடுக்கப்பட்ட ஊதியமான 50 லட்சத்தை கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் விருதுக்கு நடிகர் சேதுபதியின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அறம் பட இயக்குனர் கோபி நயினார் உள்பட 11 பேருக்கு பெரியார் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த விருது வழங்கும் விழா வரும்  15, 16 ஆகிய தேதிகளில் சென்னை பெரியார் திடலில் நடக்கும் திராவிடர் திருநாள் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

[youtube-feed feed=1]