மாதவிடாய் குறித்த ‘ப்ரீயட்.எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’ என்ற இந்திய ஆவணப்படம் 2019ம் ஆண்டின் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது. கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் மாதவிடாய் காலங்கள் பெண்கள் பயன்படுத்தும் நேப்கின்களை குறைந்த விலைக்கு தயாரிக்கும் இயந்திரம் கண்டுப்பிடித்ததை மையமாக கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

oscar

திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, தயாரிப்பு, பாடல், சிறந்த நடிகர், நடிகைகள் என பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவில் நடைபெற்றது.

இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றிப்பெற்ற படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. ’ப்ளாக் பாந்தர்’ என்ற ஆங்கில திரைப்படம் சிறந்த அடை வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் செட் அமைப்பாளர் என மொத்தம் 3 விருதுகளை தட்டிச்சென்றது. அந்த வரிசையில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து இந்தியாவின் உருவாகப்பட்ட ‘ப்ரீயட் .எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’ என்ற ஆவணப்படம் 2019ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான குறு ஆவணப்பட பிரிவில் வெற்றிப்பெற்று விருதை வென்றுள்ளது.

period

மாதவிடாய் குறித்து இந்திய பெண்களிடையே நிலவும் தவறுதலான புரிதல்கள் மற்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதலை கருப்பொருளாக கொண்டு உருவாகப்பட்டதே ‘ப்ரீயட். எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’. இந்த ஆவணப்படத்தை சீக்கியா எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்திய – ஈரானிய திரைப்பட இயக்குநர் ராய்கா ஜேடாப்ச்சி இதனை இயக்கியுள்ளார். கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நேப்கின்களை குறைந்த விலையில் தயாரிக்க புதிய இயந்திரத்தை கண்டுப்பிடித்து அதர்கான காப்புரிமையை பெற்றார்.

123

முருகானந்தத்தின் இந்த முயற்சியினால் இதுவரை அந்த ஊரில் பெண்கள் சுகாதாரமற்ற, தூய்மைக்குறைவான செயல்முறைகளை பின்பற்றி வந்ததை மாற்றி அவர்களை ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்துள்ளது. பொருதாளாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு முருகானந்தத்தின் படைப்பு வரப்பிரசாதமாக இருக்கிறது. இதனால் அப்பகுதி பெண்கள் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது.

முருகானந்தத்தின் கண்டுப்பிடிப்பை பல நிறுவனங்கள் விலைக் கொடுத்து வாங்க முன் வந்த போதும் அதனை விற்க அவர் மறுத்துவிட்டார். முருகானந்தம் கண்டுப்பிடித்த தரமான நாப்கின்களை பயன்படுத்துவதால் மாதவிடாய் காலங்கள் பெண்கள் இயல்பாக இயங்க முடிவதாக தெரிவித்துள்ளனர்.

முருகானந்தத்தின் இத்தகைய முயற்சியை கொண்டு உருவாக்கப்பட்டது தான் ‘Period. End of Sentence’ என ஆவணப்படம். தற்போது இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது.