புதுடெல்லி: நரேந்திர மோடி அரசில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தொடர்ந்து மேசமடைந்துவரும் நிலையில், கடந்த மாதத்தில் அதன் அளவு 8.5% அதிகரித்துள்ளதாக இந்தியப் பொருளாதாரத்திற்கான கண்காணிப்பு மைய அறிக்கை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வடமாநிலமான ஹரியானா மற்றும் வடகிழக்கு மாநிலமான திரிபுரா போன்றவற்றில் வேலையில்லா திண்டாட்டம் 20% கூடுதலாக உள்ளதாகவும், ராஜஸ்தானில் கடந்தாண்டைவிட வேலையில்லா திண்டாட்டம் இரட்டிப்பாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதன் விகிதம் 1.1 சதவீதம் என்பதாக உள்ளதாம். கிராமப்புற வேலை வாய்ப்பின்மை திண்டாட்டம் 8.3% என்பதாவும், நகர்ப்புற வேலையில்லா திண்டாட்டம் 8.9% என்பதாகவும் உள்ளது.

உற்பத்தித் துறையில் நிலவும் வேலைவாய்ப்பு சதவீதம் 5.7% என்பதாக குறைந்துள்ளதாம். பொருளாதாரத்தின் மிக முக்கியமான உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பது அபாய அறிகுறி என்று ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

வேளாண்மைத் துறையைப் பொறுத்தமட்டில், நிலைமை இன்னும் மோசம். 2011-12 மற்றும் 2017-18ம் ஆண்டு காலகட்டங்களில் 27 மில்லியன் என்ற விகிதத்தில் உள்ளது.