ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு கடந்த நவம்பர் 20-ம் தேதி, சிறுநீரகம், ரத்தம் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டன. சோதனைக்குப் பின், அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைசெய்தனர். அதன்பேரில், புழல் மத்திய சிறைக்கு மாற்றும்படி பேரறிவாளன் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது

இதையடுத்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், புழல் மத்திய சிறைக்கு  மாற்றப்பட்டார்.

இதற்கிடையே பரோலில் வந்தபோதும் மருத்துவ சிகிச்சையை தொடர்ந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில்  அவருக்கு சிறுநீரக தொற்று பாதிப்பு மீண்டும் ஏற்பட்டது. இதையடுத்து  சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்