டெல்லி: ஒரு மாத விடுமுறை பரோலில் வீட்டில் தங்கியிருக்கும் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை 3 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது அவர் ஒரு மாத விடுமுறை பெற்று வீட்டில் இருந்து வருகிறார். இதற்கிடையில், தனக்கு ஜாமீன் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றத.. அப்போது, மருத்துவ சிகிச்சைக்காக சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளன் தனது வழக்கை 3 வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பேரறிவாளன் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கை 3 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.