துரை

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமை குறித்து பீப்பிள்ஸ் வாட்ச் (People’s watch) என்னும் சேவை நிறுவனம் மூத்த பெண் உறுப்பினர்களின் ஆய்வுக் குழு அமைக்க உள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 இளைஞர்கள் பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளனர்.  அதன் பிறகு அந்த வீடியோவை வெளியிடுவதாக பிளாக் மெயில் செய்து ஏராளமான பணம் பறித்துள்ளனர்.   இது கடந்த சில வருடங்களாக நடந்து வரும் நிலையில் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் அரசியல் வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.    வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.   ஆளும் கட்சி பிரமுகர்களின் மகன்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதால் முழு உண்மையும் வெளிவராது என பலரும் கூறி வருகின்றனர்.

கடந்த 1995 ஆம் வருடம் மதுரையில் தொடங்கப்பட்ட சேவை நிறுவனம் பீப்பிள்ஸ் வாட்ச் (People’s watch)ச் என்னும் நிறுவனமாகும்.   இந்த நிறுவனம் பல சமூக அவலங்களையும் மக்களுக்கு எதிரான திட்டங்களையும் எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இன்று இந்த அமைப்பு தனது டிவிட்டரில், “பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் குறித்து நமது பீப்பிள்ஸ் வாட்ச்  அமைப்பு மூத்த பெண் உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்க உள்ளது.   இந்த குழு ஆய்வு நடத்தி பாதிக்கப்பட்ட பெண்களின் மவுனத்தை உடைத்து உண்மையை வெளிக் கொணர்ந்து நீதியை நிலைநாட்டும்” என தெரிவித்துள்ளது.