கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், கட்சியில் தேர்தல் அறிக்கையை டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே வெளியிட்ட நிலையில், இன்று மதியம் கோவையில் வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய கமல்ஹாசன், ‘ஆட்சி காலத்தில் நடந்த தவறுகளுக்கு பேண்டேஜ் போடுவது இல்லை எங்கள் தேர்தல் அறிக்கை. தொலைநோக்கு பார்வையுடன் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை. இந்த தேர்தல் அறிக்கை, ஒரு உன்னதமான அறிக்கை. நல்ல திட்டங்களை நிறைவேற்றி விட்டாலே தமிழகம் முன்னேறிவிடும் என்றார்.
தமிழகத்தின் ரூ.5.60 லட்சம் கோடி கடன் அடைக்கப்பட்டு வளமாக்கப்படும்.
போக்குவரத்து துறை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லப்படும். போக்குவரத்து ஊழியர்கள் பங்குதாரர்களாக ஆக்கப்படுவார்கள்.
இல்லத்தரசிகளுக்கு அவர்களது திறமைகளை கண்டறிந்து அதை ஊக்குவித்து அவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
ராணுவ கேண்டீன் போல, அனைத்து பொருட்களும் விலை மலிவாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் ‘மக்கள் கேண்டீன்’ அறிமுகப்படுத்தப்படும்.
விவசாய பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்டு பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்யப்பட்டு வருமானத்தை பெருக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் பெரு நகரங்களில் மெட்ரோ ரயில்கள் ஓடும்.அமைப்பு சார தொழிலாளர்கள் ஒரு அமைப்புக்குள் கொண்டுவரப்படுவார்கள்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார
கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ் தேர்தல் அறிக்கை குறித்து பேசியதாவது:
50 லட்சம் பேருக்கு உடனடி வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
தனி நபர் வருமானம் 2 மடங்கு உயர்த்தப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.
ரூ.60 ஆயிரம் கிடைக்கும் வரை வருமானம் உயர்த்தப்படும்.
நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும்.
சமூகநீதி அனைவருக்குமானது. அனைவருக்கும் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்பது எங்கள் இலக்கு. *ஆசிரியர்களுக்கு டிரஸ்கோடு தரப்படும். அவர்கள் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். அரசு *பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும். படித்த படிப்புக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.