சென்னை: “தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என்று கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ் அவருடன் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியது நீதிமன்ற அவமதிப்பு என கூறினார்.
அன்புமணி ஒரு மோசடிப்பேர்வழி. அன்புமணி யாருடன் கூட்டணி பேசினாலும் செல்லத்தக்கதல்ல. அன்புமணியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பு என்றவர், கூட்டணி குறித்து பேச கட்சி நிறுவனரின் அனுமதி பெறவேண்டும் என கட்சி விதிகளில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி சந்திப்பு ஒரு தெருக்கூத்து என கடுமையாக சாடினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக நான் உருவாக்கிய கட்சி. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. என்னிடம் இருந்து கட்சியைப் பறிப்பதற்கு சதித் திட்டம் தீட்டி சூழ்ச்சியோடு அன்புமணி செயல்படுவதை மக்கள் அறிவார்கள்.
“தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று சொல்வார்கள். ஆனால் தந்தையிடம் இருந்து கட்சியை அபகரிக்க நினைத்த இந்த கும்பலுக்கா ஓட்டுபோடுவது என்று மக்கள் அன்புமணிக்கு ஓட்டுப்போடமாட்டார்கள்.
அன்புமணி கூட்டணி பேசுவது ஒரு கூத்து, நாடகம். என் தலைமையில்தான் கூட்டணி பற்றி பேச முடியும். நான் அமைப்பதே பாமக கூட்டணி. நான் சேரும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். கட்சி என்னிடம்தான் உள்ளது. அன்புமணி பாமகவில் இல்லை. பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் பதவியை நானே எடுத்துக் கொண்டேன்.
நான் செய்த சத்தியத்தை மீறி அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கினேன். அன்புமணி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்பே தெரியவில்லை. நான் ஆரம்பித்த கட்சியை உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை. அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பாமகவில் இருந்து அவரை நீக்கினேன். அவர் ஒரு கோஷ்டியை வைத்துக்கொண்டு என்னை மோசமாக விமர்சித்தனர்.
தந்தைக்கு துரோகம் இழைத்த நபருக்கு யார் ஓட்டுப் போடுவார்கள் என்றவர், பா.ம.க தனி மனிதன் தொடங்கிய கட்சி, என்னிடம் இருந்து கட்சியை பறிக்க சதி நடக்கிறது, அன்புமணி பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினராக இல்லை என்றவர் இந்த சூழலில் ஒரு நபர் ஒரு கட்சியோடு பேசி ஒப்பந்தமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்புமணியின் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது நீதிமன்ற அவமதிப்பு. கூட்டணி விவகாரம் குறித்து இரண்டு நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கப்படும். அது தேசிய அளவிலான கூட்டணியாக இருக்கலாம், திராவிடமாக இருக்கலாம் என்று கூறினார்.
[youtube-feed feed=1]