கமதாபாத்

காங்கிரஸ் செயலர் ஆன பிறகு தனது முதல் டிவிட்டர் பதிவுகளை பிரியங்கா காந்தி பதிந்துள்ளார்.

காங்கிரஸ் செயலராக பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சித் தலவர் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டார். அத்துடன் அவர் உத்திரப்பிரதேச கிழக்கு மாநில பொருப்பாளராகவும் உள்ளார். அவர் வரவுள்ள மக்களவை தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  அவர் குஜராத் மாநிலம் சென்றுள்ளார்.

மகாத்மா காந்தி அமைத்த சபர்மதி ஆசிரமம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. நேற்று 50 அண்டுக்ளுக்கு பிறகு குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் செயற்கு ழு கூட்டம் நடந்தது. இதை ஒட்டி குஜராத் மாநிலம் சென்றுள்ள காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் சபர்மதி ஆசிரமம் சென்றனர்.

பிரியங்கா காந்தி தனது தாயார், சகோதரர் மற்றும் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். பிரியங்கா காந்தி பெயரில் தற்போது அகில இந்திய காங்கிரஸ் செயலர் என்னும் முறையில் அதிகார பூர்வ டிவிட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் நேற்று தனது முதல் இரு பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி தனது முதல் டிவிட்டர் பதிவில், “சபர்மதியின் எளிய கண்ணியத்தில் உண்மை உயிர் வாழ்கிறது” என பதிந்துள்ளார். இதற்கு 21000 பேர் வரவேற்பு தெரிவித்துளனர். அத்துடன் 6400க்கும் மேற்பட்டோர் மறுபதிவு செய்துள்ளனர். எராளமானோர் பிரியங்காவை வாழ்த்தி பின்னூட்டம் இட்டுள்ளனர்.

பிரியங்கா தனது இரண்டாம் பதிவில். ”நல்லவைகளுக்காக எனக் கூட வன்முறை நிகழ்த்துவதை நான் வெறுக்கிறேன். ஏனென்றால் அந்த நல்லவை தற்காலிகமானது. ஆனால் அதனால் ஏற்படும் கொடுமைகள் நிரந்தரமானவை” என பதிந்துள்ளார். இதற்கு முந்தைய பதிவைப் போலவே இந்த பதிவுக்கும் ஏராளமான ஆதரவு உள்ளது.

 

காங்கிரஸ் தொண்டர்கள் பலர் பிரியங்காவின் பதிவால் உற்சாகம் அடைந்துள்ளனர்.