அரபி கடலில் உருவாகி இருக்கும் ‘டக் தே’ புயல் காரணமாக கேரளா மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கோவையிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

கொரோனா தொற்று பரவலை அடுத்து அதற்கான தடுப்பூசி போடும் பணி நடைபெறுவதால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தடுப்பூசி மையங்களுக்கு வெளியில் குடை பிடித்துக்கொண்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
கோவையில் கொட்டும் மழையில் குடை பிடித்துக்கொண்டு பொதுமக்கள் தடுப்பூசி போட காத்திருப்பு.
இடம் – சிங்காநல்லூர் வரதராஜபுரம் மாநகராட்சி பள்ளி#Coimbatore#vaccine pic.twitter.com/FkbmR2UuDE
— கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) May 15, 2021
கோவை சிங்காநல்லூரில் உள்ள வரதராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
[youtube-feed feed=1]