சென்னை: முழு ஊரடங்கில் மக்களின் ஒத்துழைப்பு நன்றாக இருந்ததாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலை காவல் நிலையம் வாகன தணிக்கையை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டாலும் மக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்.
முழு ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு தருகின்றனர். தளர்வு அளிக்கப்பட்டாலும் மக்கள் அவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து வியாபாரிகள் உள்ளிட்டோருடன் சென்னை காவல் மாவட்டத்தில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் ஆலோசித்துள்ளனர். மாதவரம் பூ, பழ சந்தை, காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை மீன்சந்தைகளில் நெரிசலைக் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.