நெட்டிசன்:
கடந்த 3 நாட்களாக பணம் மாற்ற வங்கிகள், தபால் அலுவலகம், ஏடிஎம் இயந்திரம் முன் மக்கள் வெயில் மழை என பார்க்காமல் காத்து கிடக்கின்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் பணத்திற்கு அலைவது பரிதாபமாக உள்ளது.
ஆகவே பணம் மாற்ற செல்லும் பொதுமக்களே…. தாங்கள் பணம் மாற்ற செல்லும்போது, கீழ்காணுபவற்றை உடன் எடுத்துச்செல்லுங்கள்… உங்களின் தேவைக்கு….
பணம் மாற்ற செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு…….
1. ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை
2. வங்கி பாஸ்புக், Bank A.C book
3. தண்ணீர் பாட்டல்கள்
4. மதியஉணவு
5. குடை
6. தரையில் விரித்து உட்கார பாய்
7. தேவையான மருந்துகள் (கண்டிப்பாக தலைவலி மாத்திரை)
8. மொபைல் ரீசார்ஜ் கூப்பன்
9. கொரிப்பதற்கு தேவையான பொட்டுகடலை, வேர்கடலை
10. மொபைல் ஹெட்போன்11. பவர் பேங்க்
12. மாலைநேர உணவு (டிபன்)
13. பிஸ்கட் 3பாக்கெட்
14. பொறுமை (முடியாதவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கலாம்)
15. தலைசுற்றி வீழ்ந்தாலும், மயக்கம் அடைந்தாலும், உயிரே போனாலும் நாட்டுக்காக என மனதில் உறுதிவேண்டும்
(வாட்ஸ்அப் பதிவு)