ன்னமும் முழு அளவில் ஏ.டி.எம்.கள் இயங்கவில்லை. இயங்காத ஏ.டி.எம்.கள், இயங்கினாலும் பெரிய கியூ.. என்று, “நோட்டு மாத்த” மக்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.   இது குறித்த நெட்டிசன்களின் குமுறல், புலம்பல் இங்கே….
2
யெஸ். பாலபாரதி ·
ன்னிடம் ஐநூறோ, ஆயிரமோ இல்லை. வங்கியில் இருக்கும் பணத்தில் நூறு ரூபாயைக்கூட எடுக்க முடியவில்லை. காலையில் இருந்து 50 ஏ.டி.எம் மையங்களில் சுற்றித்திரிந்ததுதான் மிச்சம்.
தடாலடி, பிரமாதமான ஐடியான்னு சொன்னவங்க எல்லாம்.. வீட்டுக்குள்ளேயே கட்டு கட்டா வச்சிருக்காங்க போல. யாரும் வாயத்திறக்கக்காணாம்.
Saravanan Chandran
ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் ரோட்டில் ஒரு இடத்தில் மட்டும் கூட்டம் தெரிந்தால் அது டாஸ்மாக். இப்போது ஏ.டி.எம்.
Padalur Vijay Vijay
ஏ.டி.எம் வாசலில் நின்றுக்கொண்டு மக்கள் அனைவரும் தங்கள் மனதிற்குள் பாடி வரும் பாடல் வரி.
“பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன்…!!!
பணமே நீ வருவாயென…!!!
· 4
“என்னம்மா ஆச்சு உங்களுக்கு?” பக்கத்தில் இருந்து..
பால் விலைய நெய் விலையா
பக்குவமா ஆக்குனீங்க…
கரெண்ட்டுனு சொன்னாலே
ஷாக் அடிக்கிறமாதிரி செஞ்சீங்க…
பஸ் டிக்கெட் விலையை
ஏர்பஸ் டிக்கெட்டா மாத்துனீங்க…
எல்லாரையும் படுக்கப்போட்டு
பஸ்சத்தான் ஏத்துனீங்க…
மிச்சசொச்ச சம்பளத்தை
டாஸ்மாக்ல புடுங்குனீங்க…
அப்பல்லோல நீங்க போயி
நிம்மதியா படுத்தீங்க
மோடினு ஒரு தாடி
நீங்க இல்லா நேரம் பாத்து,
மிஞ்சிப்போன சில்லறையும்
செல்லாதுனு சொல்லிட்டாரு…
ஜீரோவா இருந்த பேலண்ஸ்
மைனஸ்ல போகுதும்மா…
ஏ.டி.எம் வாசலிலே
சனம் கருவாடா காயுதும்மா…
கொஞ்சம் கொஞ்சமா
புடுங்குன மகாராசி நீங்க
திரும்பி வந்தா எங்ககிட்ட
புடுங்க ஒன்னும் இல்லையம்மா…
அந்த கவலைதான் என்னை
வாட்டி வாட்டி கொல்லுதும்மா…
பயமா இருக்குமா….
என்னம்மா ஆச்சு எங்களுக்கு?

Vishal Raja
இன்றைய ஞானம் :
——————————-
– ஒவ்வொரு சராசரி இந்திய குடிமகனும் ஏ.டி,எம்முக்குள் சென்று பணம் பெற்றுவர எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் முப்பதிலிருந்து நாற்பது விநாடிகள்.
– வேலை செய்கிற ஏ.டி.எம் முன்னால் மட்டும்தான் வரிசைக் கட்டி நிற்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. பாதி ஷட்டர் மூடியிருக்கும் ஏ.டி.எம், வேலை செய்யவில்லை காசில்லை என்று வெளியே எழுதிப் போட்டிருக்கும்  ஏ.டி.எம் என எல்லா ஏ.டி.எம்கள் முன்னாலும் வரிசைக் கட்டி நிற்கலாம்.
இன்றைய கர்மா:
—————————
மணி பர்ஸ் நிறைய பணம் வேண்டும் என்று கேட்டது உண்மைதான். அதற்காக இரண்டாயிரம் ருபாய்க்கு நாற்பது ஐம்பது ரூபாய் தாள்களை ஏ.டி.எம்மில் வரவைத்து பர்ஸை நிரப்ப சொல்லவில்லை.
இன்றைய அரசியல்:
———————————
பணம் சம்பாதிக்க நாயாக அலைந்தால் சரி. சம்பாதித்த பணத்தை கையில் வாங்கி செலவு செய்யவும் நாயாக அலையவிட்டால் எப்படி சாரே?
 
இள சக்திவேல்
ஏ.டி.எம் ல ரெண்டாயிரம் நோட்டு ஐஞ்சு எடுத்துட்டேனே….
.
.
.
..
.
.
ஏங்க, தூங்கினது போதும், எழுந்து ஸ்கூலுக்கு போய் புள்ளைங்களை கூப்பிட்டுக்கிட்டு வாங்க.
அவ்வ்.. கனவா?
 
#  ப்படி பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று சமூகவலைதளங்களில் கிண்டலும், குமுறலும், ஆதங்கமுமாய் பதிவிட்டுவருகிறார்கள் நெட்டிசன்கள்.  ஏ.டி.எம். தேடி அலைந்து கால்கடுக்க நின்றவர்களுக்கு இதுதானே ஆறுதல்!