மக்கள் வேலைக்குப் போவதா, வங்கி கியூவில் நிற்பதா? நடிகர் விஜய் சேதுபதி காட்டம்

Must read

 
பெரும் நடிகர்களில் இருந்து பலரும் மோடியின் செல்லாத அறிவிப்பை வரவேற்றுக்கொண்டிருக்க.. மெல்ல மெல்ல திரையுலகில் அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
“நல்ல நடவடிக்கைதான். ஆனால், மக்கள் பாதிப்பும் பெரிது” என நீக்கு போக்காக சொன்னார் நடிகர் விஜய்.
நடிகர் மன்சூர் அலிகானோ, “மக்களை ராப்பிச்சைக்காரர்களாக்கி விட்டார் மோடி” என்று கடுமையாக தாக்கினார்.

நடிகர் விஜய்சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும், மோடியின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.
“சென்னை போன்ற பெருநகரங்களிலேயே வங்கி மற்றும் ஏ.டி.எம். வாசல்களில் மக்கள்  நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். அப்படியானால் , கிராமங்களின் நிலையை யோசித்து பாருங்கள்.
வங்களில் காத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடம்  வேலை செய்து சாப்பிடுபவர்கள் தான். வேலைக்கு சென்றால் தான் உணவு என்ற நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் காத்துக்கொண்டிருந்தால், அவர்கள் வேலைக்கு செல்வதா, வேண்டாமா?
தன்னுடைய குழந்தைக்கு திடீரென் உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது ரூபாய் நோட்டுகள் செல்லாததால் தான் மிகவும் சிரமப்பட்டேன்” என்று தெரிவித்த விஜய் சேதுபதி, “நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட முடிவுதான் என்றாலும், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article