டெல்லி:

குடியுரிமை திருத்த சட்டத்திதால் நாட்டு மக்களிடையே அச்சம் நிலவி வருவதால் அதுகுறித்து  மக்களவையில் விவாதிக்க வேண்டும் என  கோரி காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ள நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், சிஏஏ சட்டத்தால் மக்களிடையே அச்சம் நிலவுவதால், இந்த சட்டம் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி சார்பில் ஒத்தி வைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

அதுபோல, காந்திஜி-க்கு எதிராக பாஜக தலைவர் அனந்தகுமார் ஹெக்டே பேசியது குறித்து விவாதிக்கக் கோரியும் நோட்டீஸ் அளித்துள்ளது.

இதற்கிடையில் பாராளுமன்ற  மேலவையில் (ராஜ்யசபா) குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்ணா செய்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் சபை மதிய இடைவேளை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.