கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சதி – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றச்சாட்டு

Must read

புதுடெல்லி:
கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சதி நடப்பதாக  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம் சாட்டியுள்ளார்.
ஐதராபாத்தில் நடந்த ராமினேனி அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய இந்தியத் தலைமை நீதிபதி, என்.வி. ரமணா, பாரத் பயோடெக் எம்.டி.க்கள் மருத்துவர் கிருஷ்ணா எம்.எல்லா மற்றும் கூட்டு எம்.டி சுசித்ரா எம்.எல்லா ஆகியோரை மருந்து அறிவியலின் வளர்ச்சிக்கு அவர்கள் செய்த பங்களிப்பிற்காகப் பாராட்டினார்.
பாரத் பயோடெக் 2021 ஆம் ஆண்டுக்கான விசிஷ்ட புரஸ்கார் விருதை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ரமேனினி அறக்கட்டளையிடமிருந்து பெற்றது, இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்தியத் தலைமை நீதிபதி, என்.வி. ரமணா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், “தடுப்பூசிகளைப் பற்றி நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பல்வேறு ஆய்வுகள் கோவாக்சின் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றன.  மேலும் புதிய வகைகளிலும் கூட வேலை செய்கின்றன.ஆனால் இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதால் பலர் அதை விமர்சித்தனர். சிலர் உலக சுகாதார  நிறுவனத்திடம் புகார் செய்தனர். நாட்டில் உள்ள பலர் தடுப்பூசிக்கு உலக அங்கீகாரத்தை தடுக்க முயன்றனர்.சக தெலுங்கர்களின் மகத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்.ஒரு தெலுங்கர் இன்னொரு தெலுங்கரை உலகில் ஊக்குவிக்க வேண்டும். ஒற்றுமை அவசியம் எங்களிடையே… இதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நமது தெலுங்கு மொழி மற்றும் கலாச்சாரத்தின் மகத்துவம் உயர்த்தப்பட வேண்டும்” என்றும் கூறினார்.

More articles

Latest article