சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள 1500 பேருக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், உலமாக்கள் ஓய்வூதியம் தொடர்பாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில ஹஜ் இல்லத்தில் இன்று ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கன பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு  சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்  கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த ஆண்டு தமிழகத்தி லிருந்து மக்கள் தொகையின் அடிப்படையில் 1500 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு 10 கோடி ரூபாய் நிதி உதவியினை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார் என்றவர், இந்த ஆண்டு ஹஜ் பயணம் கேரளாவில் இருந்து தொடங்க உள்ளது. பயணம் மேற்கொள்வதற்கான உணவு இருப்பிடம் ஆகிய செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்

மேலும், உலமாக்கள் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி 10058 பேருக்கு அடுத்த மாதம் மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. ஓய்வு பெற்ற உலமாக்கள் தங்களுக்கு வேண்டுமானால் 25000 ரூபாய் மானியத்தில் இருசக்கர வாகனம் பெற்றுக் கொள்ளலாம். ஓய்வு ஊதியம் பெறும் உலமாக்கள் இறந்து போனால் அவரது துணைவியாருக்கு ஓய்வு ஊதியம் வழங்கப்படும்.

இவ்வாறு கூறினார்.