டில்லி:

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் குறித்த இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு  மோடி அரசின் பித்தலாட்டம் என்பது தெரிய வந்துள்ளது.

த்திய அரசு நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால், இந்த திட்டம் தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல் ஜெயலலிதா ஆட்சியின்போது, கடந்த 1994ம் ஆண்டே இந்த திட்டம் தொடங்கப்பட்டு, தொழிலாளர்களிடம் இருந்து எந்தவித முன்பணமும் வசூலிக்காமல் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், மோடி அரசு தற்போதுதான் இந்த திட்டத்தை  அறிமுகப்படுத்துவதுபோல ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி  மாதம் ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய  ஓய்வூதியத்திட்டம் தரப்படும் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு மேல் மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் மக்களை ஏமாற்றும் திட்டம் என்பதும், தமிழக அரசின் திட்டத்தை காப்பியடித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

றைந்த தமிழக  முதலவர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் காத்திட 1994-ம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நலத்திட்டத் தினையும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியமும் உருவாக்கப்பட்டது.

அதன்படி, கட்டுமாண தொழிலாளர் து மகன்  திருமணத்திற்கு ரூ. 3 ஆயிரமும், மகள் திருமணத் திற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும்,  மகப்பேறு உதவியாக ரூ.6 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன் 60 வயது நிறைவு செய்த பதிவு பெற்ற தொழிலாளியாக இருக்க வேண்டும் அல்லது 60 வயதினை நிறைவு செய்யாதிருந்தாலும் பதிவு செய்திருந்து நோயின் காரணமாக வழக்கமான பணி செய்ய இயலாமல் முடக்கம் ஏற்பட்டிருந்தாலும், அவர்களுக்கு  ரூ.1000 மாதம் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஓய்வூதியம் பெறும் கட்டுமானத் தொழிலாளி இறந்துவிட்டால் அவரது கணவர்/ மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ. 400 வழங்கப்படும் என்றும், பணியின்போது பணியிடத்தில் விபத்து மரணம் நிகழ்ந்தாலும், 01.03.2016-க்கு பிறகு பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளி பணியிடத்தில் இறந்தால் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

அதுபோல கட்டுமானத் தொழிலாளர்களின்  இயற்கை மரணத்தின்போது, ஈமச்சடங்காக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்  ன அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், மத்தியஅரசோ, தற்போதுதான் புதிதாக நடைமுறைப்படுத்துவது போல, ஓய்வூதிய திட்டத்தை  அறிவித்து நாட்டு மக்களை ஏமாற்றி உள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டத்தின்படி, ஓய்வூதியம் பெற விரும்பும்  கட்டுமானத் தொழிலாளர் கள் ஒவ்வொருவரும் மாதம் ரூ.100 செலுத்த வேண்டியது கட்டாயமாகிறது.

மாதா மாதம் ரூ.100 செலுத்தி இந்த திட்டத்தில் இணைந்தாலும், அவர்கள் 60 வயதுக்கு  பிறகு தான்  மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை.  இந்த திட்டத்தை உன்னிப்பாக கவனித்தால், இது ஒரு காப்பீடு திட்டத்தை போன்றதே  என்பது தெளிவாகும்.

ஏற்கனவே பல்வேறு திட்டங்களை தனியாருக்கு தாரை வார்த்து, தனியார் முதலாளிகளை வாழ வைத்து வரும் மோடி அரசு, கட்டுமான தொழிலாளர்களிடம் இருந்து,  பணத்தையும் பெற்று, அந்த திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள்  ஓய்வூதிய திட்டம் மற்றும் எந்தவொரு திட்டத்திலும் பணியாளர்கள் பணம் செலுத்த வேண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.