டில்லி:

ருமானவரிச் சலுகை பெறுபவர்கள் 3 கோடி பேர் என்று நிதி அமைச்சர் நாடாளு மன்றத்தில் தெரிவித்த தகவல் தவறு என்பது  ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று பாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதிமந்திரி பொறுப்பு வகிக்கும் பியூல் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், வாக்கு வங்கியை எதிர்பார்த்து,  இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள பாஜக அரசின் பதவிக்காலம்  இன்னும் 2 மாதம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில்,  திட்டங்களை செயல் படுத்தவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாத நிலையில் மக்களை ஏமாற்றும் வகையில் பல் சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு  ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் எனஅறிவித்துள்ள பாஜக அரசு, பல மாநில அரசுகள் ரூ.10 ஆயிரம் வழங்கி வரும் நிலையில், சொற்ப அளவே வழங்குவதாக அறிவித்து விவசாயிகளை வஞ்சித்து உள்ளது.

இந்த நிலையில், வருமான வரிச்சலுகை அறிவிப்பிலும் பல்வேறு குளறுபடி களையும், தவறான தகவல்களையும் தெரிவித்து உள்ளது.

நடுத்தர வர்க்க மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க அரசு முடிவெடுத்திருப்ப தாக அறிவித்த கோயல்,  தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.

கூடவே இந்த வரிச்சலுகையால் 3 கோடி வரி செலுத்துபவர்கள் பயன் அடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

ஆனால்,  வருமான வரித்துறை வெளியிட்டுள்ள வரி செலுத்துபவர்களின் பட்டியலிலோ ஏறக்குறைய சுமார் 80 லட்சம் பேர் மட்டுமே ரூ.5 லட்சம் வரையிலான வரிகளை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பல்வேறு பொய்யான தகவல்களை மக்களிடையே பரப்பி வரும் தெரிவித்து வரும் பாஜக அரசு, தற்போது பாராளுமன்றத்தில் அண்ட புளுழு  ஆகாச புளுகாக மாபெரும் பொய்யை உரைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள பட்டியலை பார்ப்போம்…

2017-18ம் ஆண்டு, நாடு முழுவதும் வரி செலுத்தியவர்கள் பட்டியலில், 2லட்சத்து 50ஆயிரம் முதல் 3லட்சத்து 50ஆயிரம் வரை வரி செலுத்தியவர்கள் 30,09,390 (தோராயமாக 30 லட்சம்) பேர் என்றும்,

3லட்சத்து 50ஆயிரம் முதல் 4லட்சம் வரை வரி செலுத்தியவர்கள் 15,93,322 (தோராயமாக 16 லட்சம்) பேர் என்றும்,

4லட்சம் முதல் 4லட்சத்து 50ஆயிரம் வரை வரி செலுத்தியவர்கள் 16,86,545 (தோராயமாக 17 லட்சம்) பேர் என்றும்,

4லட்சத்து 50ஆயிரம் முதல் 5லட்சம் வரை வரி செலுத்தியவர்கள் 16,67,740 (தோராயமாக 17 லட்சம்) பேர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மொத்த கூட்டுத்தொகை 79,56,997 ஆக உள்ளது.  (ஏறக்குறைய 80 லட்சம் பேர் என வைத்துக்கொள்ளலாம்) .

ஆனால் நிதி அமைச்சர் பியூஸ் கோயல் கூறியிருப்பதோ  3 கோடி பேர்.

கிட்டதட்ட 2 கோடியே 20 லட்சம் பேரை அதிகமாக தெரிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் …  ஏன் இந்த பொய் பித்தலாட்டம்.

கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு என்பது தமிழ் பழமொழி. ஆனால், நிதி அமைச்சரின் புளுகோ சில மணி நேரங்கள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

பாராளுமன்ற தேர்தலில் நடுத்தர வர்க்க மக்களின் வாக்குகளை பெறும் வகையில், இவ்வளவு பெரிய பொய்யை கூறியிருப்பது மக்களிடையே பாஜக மீதான வெறுப்பை மேலும் அதிகரித்து உள்ளது.