சென்னை:
திக ஒலி எழுப்பினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஒலி மாசு தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீஸார் வழக்குகளை அதிகளவில் பதியவில்லை. இனிமேல் வழக்கு போட வசதியாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ஒலி மாசு கண்டறியவதற்காக நவீன கருவிகளை வாங்க உள்ளோம். அதிக ஒலி எழுப்பும் வாகன ஓட்டிகளுக்கு இதுவரை ரூ.100 மட்டுமே அபராதம் விதித்து வருகிறோம்.

இனி ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளோம். வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பொருத்தும் மெக்கானிக், வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.