சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலுக்குள் பேனா வடிவில் சிலை அமைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில், 39 கோடி ரூபாயில் நினைவாலயம் கட்ட முடிவு செய்துள்ள ஸ்டாலின் தலைமை யிலான தமிழகஅரசு, தற்போது, கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், சென்னை மெரினா கடலில் 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா சிலை ரூ.80 கோடி செலவில் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுச் சின்னங்களில் மட்டும் வாழ்ந்துவிடுவதில்லை. அதனால் அவருக்கு கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்” என்று பூவுலகில் நண்பர்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியம் விளக்கம் அளித்தார். அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலுக்குள் பேனா வடிவில் சிலை அமைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.