தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, தி வயர், நியூஸ் 18 உள்ளிட்ட இந்தியாவின் பிரபல நாளிதழ்களின் முக்கிய பத்திரிகையாளர்கள் 40 பேரின் மொபைல் போன்கள் வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் வேவு பார்க்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.

இவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்த மென்பொருள் தடயவியல் வல்லுநர்கள், ஸ்பைவேர் பயன்படுத்தப் பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறியிருக்கின்றனர்.

படம் நன்றி தி வயர்

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ ஸ்பைவேர் உலகநாடுகள் பலவற்றில் உள்ள அரசாங்கங்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறது என்பதும், அவற்றை அரசாங்கங்களுக்கு மட்டுமே அந்த நிறுவனம் விற்பாதாகவும் கூறியிருக்கும் நிலையில், இந்திய ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி வயர் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர் ரோகினி சிங், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சுஷாந்த் சிங், இந்தியா டுடேவின் சந்தீப் உன்னிதான், ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழின் நிர்வாக ஆசிரியர் சிஷிர் குப்தா மற்றும் தலைமை ஆசிரியர் பிரசாந்த் ஜா, தி இந்து நாளிதழில் விஜய்தா சிங், டி.வி.18 னின் மனோஜ் குப்தா உள்ளிட்ட பலரின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

உலகம் முழுவதும் 10 நாடுகளில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட முக்கிய நபர்களின் மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி குறித்து இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தி வயர்