டெல்லி: டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரத்தில் மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் செல்போன்கள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெகாசஸ் ஸ்பைவேர் சாப்ட்வேர் மூலம் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதுகுறித்து மத்தியஅரசு விளக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முடக்கினர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளர் ராம் உள்பட ஏராளமானோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த விசாரணையின்போது, மத்திய தரப்பில், விசாரணை குழு அமைக்க உள்ளதாகவும், டெலிபோன் ஒட்டுக்கேட்கப்படவில்லை என்றும் பதில் கூறியது.
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார். தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி பெகாசஸ் வழக்கின் உண்மைகளை பொது வெளியில் வெளியிடுவதற்கு எதிராக அவரது வாதங்கள் இருந்தன.
அவரது வாதத்தை ஏற்றுக்கொள்வதாக கூறிய உச்சநீதிமன்றம் நீதிபதி சூர்ய காந்த், தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்யவோ அல்லது பாதுகாப்பு அமைச்சக நெறிமுறைகளில் குறுக்கிடவோ நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் உங்களை வெளியிடச் சொல்ல மாட்டோம் … ஆனால் பிரச்சினை எளிது. இங்குள்ள தனிநபர்கள் தங்கள் தொலைபேசிகளின் இடைமறிப்பை சமர்ப்பிக்கிறார்கள். தகுதிவாய்ந்த அதிகாரத்தின் அனுமதியால் செய்ய முடியும். எனவே தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை சமரசம் செய்யாமல், நம் முன் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய தகுதிவாய்ந்த அதிகாரத்திற்கு என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் “அனைத்து மனுக்களும் ஒரு விஷயத்தை மட்டுமே கேட்கிறது – அதாவது, இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோருகிறது என்றார்.
அதற்கு பதில் அளித்த மத்தியஅரசு வழக்கறிஞர், இந்திய அரசு, பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா என்று அரசு பதிலளிக்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால், இந்த மென்பொருள் எல்லா நாடுகளாலும் வாங்கப்பட்டது. ஆனால் எந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டது அல்லது பயன்படுத்தப்படவில்லை என்பது தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த நாட்டாலும் வெளியிடப்படவில்லை என்று கூறினார்.
இந்த விவகாரத்தில், “நாங்கள் நீதிமன்றத்திலிருந்து மறைக்க எதுவுமில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு குழு முன் அமைக்கப்படும். ஆனால், அந்த குழுவின் வாக்குமூலங்கள் பகிரங்கப்படுத்த முடியாது. இணையதளங்கள் இராணுவ வளங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டன என்று சில அமைப்புகள் கூறுகின்றன. அதனால், இது குறித்து விசாரிக்க அமைக்கப்படும குழு முன்பு அனைத்து தகவல்களையும் நாங்கள் தெரிவிப்போம் என்று கூறினார்.
இந்தியாவின் எடிட்டர்ஸ் கில்ட் மற்றும் பத்திரிகையாளர்கள் என் ராம் மற்றும் சஷிகுமார் ஆகியோருக்காக ஆஜரான கபில் சிபல், “பெகாசஸைப் பயன்படுத்தினாரா இல்லையா என்பதை அரசாங்கம் பதிலளிக்க விரும்புகிறது, தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.” என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும், 10 நாட்களுக்கு பிறகு ஒட்டுக்கேட்பு விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தது.