சென்னை :-

பி.சி.ஸ்ரீராம்
பி.சி.ஸ்ரீராம்

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் என்றால் திரையுலகில் நடிகர், நடிகைகள் மத்தியில் நல்ல மதிப்பு உண்டு அப்படிபட்ட இவர் இன்று காலை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பெப்சி சிவா மீது புகார் கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. எதற்காக இவர் சிவா மீது புகார் கொடுத்துள்ளார் என்றால் தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தினர்(SICA) சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தினர் மீது ஊழல் முறைகேடு புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில் கூறியதாவது :-
chinnathirai-artist-association-press-meet-photos-4
பெப்சி சிவா

1. 2008 முதல் 2014 வரைக்குமான கணக்குகளை சரியாக ஒப்படைக்காதது.
2. மலேசியாவில் நடந்த 2015 ஆம் ஆண்டுக்கான SICA விருது நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட கணக்குகளில், பல லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது.
3. அது சம்பந்தமாக பலமுறை, கணக்குகளை கேட்டும், தராமல் இருந்தது.
4. இதனால் விருது நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு உரிமம் பெற்ற சன் TV-யின் TDS பணமான 37.5 லட்சத்தை திரும்ப பெற முடியாத நிலை இருக்கிறது.
 
5. சாலிகிராமத்தில் நில மதிப்புக்கு மீறி 1.25 கோடி ரூபாயை முன் பணமாக செலுத்தி, மேலும் 80 லட்சம் ரூபாய் அந்த நிலத்திற்கு தரவேண்டுமென்று ஒப்பந்தம் செய்து, SICA சங்கத்திற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பையும், பாரம்பரியமிக்க இச்சங்கத்திற்கு அவப்பெயரை திரு.G.சிவா (முன்னால் பொது செயலாளர்) அவர்கள் ஏற்படுத்தி விட்டார்.
6. 8 வருடமாக முறையாக வருமான வரி செலுத்தாதனால், 80G பெற முடியவில்லை, அதனால், சங்கத்திற்கு வரவேண்டிய நன்கொடைகள் பெற முடியாத நிலை இருக்கிறது, அதனால் மூத்த உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய உதவித் தொகை மற்றும் உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியாமல் இருக்கிறது.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறிப்பிடப்பட்டுள்ளது.