“பயணம்” படத்தில் ஒரு காட்சி

நெட்டிசன்:

யணம் திரைப்படத்திற்காக, சிறந்த கதாசிரியருக்கான விருது அப்படத்தின் இயக்குநர்  ராதாமோகனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து, பிரபல நாவல் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.

ராதாமோகன்

அப்படம், தன்னுடைய ‘இது இந்தியப் படை’  என்ற நாவலின் காப்பி என்று எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் Suresh Kannan  என்பவர் தனது முகநூல் பதிவில், “பயணம் திரைப்படம் ஹாலிவுட் படம் ஒன்றின் காப்பி” என பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவு:

ராதாமோகன் இயக்கிய ‘பயணம்’ ஏறத்தாழ அப்படியே ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் நகல்.

‘The Delta Force’ (1986) என்று நினைவு. (TWA Flight 847-என்ற விமானக்கடத்தல் சம்பவத்தையொட்டி உருவாக்கப்பட்டது) கழிவறையில் துப்பாக்கி எடுக்கப்படும் முதல் காட்சி துவங்கி பல காட்சிகள் அப்படியே நகலெடுக்கப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவிற்காக சில அபத்தமான மசாலாக்கள் தூவப்பட்டிருக்கும்.

பி.கே.பி. புகார்

இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாடு விருது வழங்கப்பட்டிருப்பதே ஒரு கொடுமை என்றால் இது தொடர்பாக இன்னொரு புகார் எழுந்திருப்பது வேடிக்கை.

பட்டுக்கோட்டை பிரபாகர், இந்த திரைப்படத்தின் காட்சிகள் தமது நாவலிலிருந்து அப்படியே எடுத்தாளப்பட்டது’ என்றும் விருதிற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசிற்கு கடிதமும் எழுதியிருக்கிறாராம்.

“டெல்டா ஃபோர்ஸ்” படத்தில் ஒரு காட்சி

உண்மை எங்கேயிருக்கிறது, ஆகாயத்திலா?”