சென்னை: சொத்து வரி, தொழில்வரிகளை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. தாமதமாக கட்டுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்துவரி மற்றும் தொழில் வரிகளை வரும் 30ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், சொத்துவரி மற்றும் தொழில் வரியை முறைப்படி தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்து.
திமுக அரசு பதவி ஏற்றதும், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தியது. அதைத்தொடர்ந்து வரி வசூலில் தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டு வரி வசூலிப்பதுடன், முறையாக வரி கட்டுபவர்களுக்கு ‘கேஷ் பேக்’ உள்பட பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. அத;னபடி,, பெருநகர 2022-23 நிதியாண்டில் சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலில் சாதனை படைத்துள்ளது. மொத்தம் ரூ. 2,044 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை மேம்படுத்துவதில், சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இதனால் வரி வசூலிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. வருத்திற்க இரண்டு முறை சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் சொத்து வரி செலுத்த செப்டம்பர் 31ம் தேதியும், மார்ச் 31ம் தேதியும் வரி செலுத்த வேண்டும். பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், சொத்துக்கு 1% மாதாந்திர அபராதம் விதிக்கப்படும்.
இந்த சொத்துவரி மூலம் மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், தூய்மை பணிகள், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி 28-ந்தேதி (மிலாடி நபி) மற்றும் 30-ந்தேதி (சனிக்கிழமை) ஆகிய அரசு விடுமுறை நாட்களில் ரிப்பன் கட்டிடத்திலுள்ள வருவாய்த்துறை தலைமையிடம், மண்டலங்களில் உள்ள வருவாய்த்துறையில் சொத்துவரி மற்றும் தொழில்வரி வசூல் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. சொத்துவரி மற்றும் தொழில்வரியினை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்தவில்லையெனில் அக்டோபர் 1-ந்தேதி முதல் அபராத வட்டித் தொகை விதிக்கப்படும். எனவே, சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் 30-ந்தேதிக்குள் சொத்து மற்றும் தொழில்வரியை இணையதளத்திலும், தலைமையகத்திலும் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.