டிஜிட்டல் இந்தியா: ரோட்டோர பானிபூரி கடையில் ஆன்லைன் பிசினஸ்

Must read

பீகாரில் ஒரு ரோட்டோர பானிபூரி கடையில் நீங்கள் பானிபூரி சாப்பிட்டுவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

paytm

பீகாரை பின் தங்கிய மாநிலம் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் பீகாரிகள் அவ்வப்போது இது போன்ற ஏதாவது வித்தியாசமான ஒன்றை செய்து அனைவரையும் மூக்கில் விரலை வைக்க வைத்துவிடுவார்கள்.
பீகார் மாநிலம் பாட்னா நகரில் பெண்கள் கல்லூரி ஒன்றின் அருகே தள்ளுவண்டியில் பானிபூரி கடை போட்டுள்ள சத்யம் என்பவர் தனது பானிபூரி வியாபாரத்தை டிஜிட்ல் மயமாக்கியுள்ளார். நீங்கள் அவரது கடையில் பேடிஎம் முறைப்படி ஆன்லைனில் பணம் செலுத்திவிட்டு எவ்வளவு வேண்டுமானாலும் பானிபூரியை ருசித்துகொள்ளலாம்
சத்யம் மேல்நிலை பள்ளிபடிப்பு முடித்துவிட்டு கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த முறை தனக்கு மிகவும் வசதியாக இருப்பதாக் சொல்லுகிறார், அதே போல இவரது கடைக்கு வரும் கல்லூரி மாணவிகளும் ஆன்லைனில் பணம் செலுத்துவ்து தங்களுக்கு மிகவும் எளிதாக இருப்பதாக சொல்லுகிறார்கள்.

More articles

Latest article