ஐபிஎல் போட்டியில் இருந்து ரெய்னா விலக என்ன காரணம்? சீனிவாசன் கூறும் பரபரப்பு தகவல்…

Must read

டெல்லி: ஐபிஎல் போட்டியில் இருந்து சிஎஸ்கே வீரர்  ரெய்னா விலக, அணி கேப்டன் தோனி காரணம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்,  நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி,  செப்டம்பர் 19 -ம் தேதி போட்டி தொடங்க உள்ளது. இதையடுத்து, அங்கு ஐபிஎல் அணி வீரர்கள் அனைவரும் துபாய் சென்ற டைந்துள்ளனர்.

அதுபோல, சிஎஸ்கே அணியும் கடந்த 21- ம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றிருந்தது. இந்த நிலையில், கடந்த வாரம் சிஎஸ்கே முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா, திடீரென ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி தாயகம் திரும்பினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அணி நிர்வாகமோ, குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகி தாயகம் திரும்பியுள்ளார் என்று கூறியது.

ஆனால், ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

துபாய்க்கு சென்றுள்ள சிஎஸ்கே வீரர்கள்  பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து அணி வீரர்கள் இடையே விவாதங்கள் நடைபெற்றதாகவும், அணி வீரர்கள் கொரேனா பாதிப்புக்கு ரணம், வீரர்கள் சென்னையில் பயிற்சி மேற்கொண்டது என்று ரெய்னா, தோனி மீத குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கேப்டன் தோனிக்கும் அவருக்கும் இடையே மனஸ்தானம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், ரெய்னா திரும்பியது, இதுதான் காரணம் என்று மற்றொரு தகவ்ல பரவியது. அதில், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள தரியல் என்ற கிராமத்தில் உள்ள சுரேஷ் ரெய்னா வின் உறவினர்கள் வீட்டில் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதும், அதில், ரெய்னாவின் மாமா அசோக்குமார் (58 வயது) மரணம் அடைந்துள்ளார். மேலும் பலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதனால்தான் ரெய்னா தாயகம் திரும்பினார் என்று தகவல்கள் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, வேறு ஒரு தகவல் பரவி வருகிறது.

சிஎஸ்கே வீரர்கள் துபாயில் முகாமிட்டுள்ள நிலையில், ரெய்னாவுக்கு துபாயில் தங்கு வதற்கு அளிக்கப்பட்ட அறை திருப்தி அளிக்காத‌தால் தான், அவர்  ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாகவும், தோனிக்கு வழங்கப்பட்டுள்ளதுபோல, தனக்கும்  சிறந்த அறை ஒதுக்க சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரியதாகவும், ஆனால்,அதற்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்த தால், அதிருப்தியுடன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி, ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்புக்கு இடையே  பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் புதிய தகவல் ஒன்றை தெரிவித்து உள்ளார்.

‘சில நேரங்களில் வெற்றி தலைக்கேறும்போது இப்படி நடக்கும் ‘ என்று கூறியவர், ஐ.பி.எல். தொடங்கவில்லை, ரூ.11 கோடி வருமானத்தை ரெய்னா இழப்பார், மேலும் அவரது தவறை உணர்ந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே என்பது ஒரு குடும்பம் போன்றது, சீனியர் வீரர்கள் எப்போதும் இணைந்தே இருப்பார்கள். யாருக்கு பிடிக்கவில்லையோ, யாருக்கு மகிழ்ச்சியில்லையோ அவர்கள் தாராளமாக திரும்பி செல்லலாம்.

தோனியுடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன்; தொற்று எண்ணிக்கை உயர்ந்தாலும் கவலை வேண்டாம் என கூறினார். காணொளியில் வீரர்களிடம் பேசிய தோனி அவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

ரெய்னா தாயகம் திரும்பிய விவகாரத்தில்  மேலே குறிப்பிட்டுள்ளது போல பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகின்றன. ஆனால், உண்மை என்ன என்பது தோனிக்கும், ரெய்னாவுக்கும் மட்டுமே தெரியும்… விளக்குவார்களா?

More articles

Latest article