மேஷம்  

நீங்கள் திட்டமிட்ட எல்லா விஷயங்களுமே திட்டமிட்டபடியே.. ஆனால்..  சற்று நிதானமாய்த்தான் நடக்கும். அதனால் என்னங்க. நல்லபடியாவே நடந்து முடியப்போகுதே. மனசைத் தயார்ப்படுத்திக்கிட்டா அதை சுலபமா எதிர்கொள்வீங்க. தேவையில்லாத கவலைகள் இப்போ மனசைவிட்டு டாட்டா சொல்லிக் கிளம்பியிருக்குமே! உங்க பேச்சில் முன் எப்போதுமே இருந்ததைவிடவும் அதிகப் புத்திசாலித்தனமும் கவரும் தன்மையும் இருக்குமுங்க. அதனால் எல்லோரும் பாராட்டும்படியா பேசுவீங்க.. நடந்துங்ககு வீங்க…. மற்றவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பீங்க.. முன்பெல்லாம் பஞ்சாயத்துப் பேசி பிரச்சினையில் மாட்டிக்கொண்டீங்க  உங்களுக்கு ஏனுங்க இந்த வேலையெல்லாம் என்றார்கள். பட்.. இப்போ உங்களை மனப்பூர்வமாய்ப் பாராட்டி “தேங்க்ஸ்” என்று நெகிழ்வார்கள்.

ரிஷபம்

நீங்க மிகவும் பிசியாக இருப்பீங்க.  சரியான தீர்மானங்களை முறையாக எடுப்பீங்க. அதனால் பல வித சிக்கல்களை முன்கூட்டியே ஊகித்து அவற்றிலிருந்து முறையாக மீளுவீங்க. ஆனாலும் உங்க முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை என்ற குறை இருக்கும். அது பாதி கற்பனைங்க. சற்றுத் தாமதமாகப் பலன் கொடுக்கப்போகுது! பார்த்துக்கிட்டே இருங்க.  ஆரோக்யம் பற்றிப் போன வருஷம் சின்னச்சின்னதா ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தது அல்லவா. இனி அதெல்லாம் சால்வ் ஆகிவிடும் பாருங்களேன்.  ஃப்ரெண்ட்ஸ் புத்திசாலியா இருப்பதால பிழைச்சீங்க. நல்ல வழிகாட்டுதல் கிடைக்குங்க. குழந்தைங்களை அதிகம் கண்டிக்கிறேன் பேர்வழின்னு டார்ச்சர் பண்ணாதீங்க. சீக்கிரம் அவங்களைப் பற்றிய  பிரச்சினை சரியாகப் போயிடுங்க.

மிதுனம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கூடிவரும். பால்பாயசமும் ரோஜா மாலையும் கன்ஃபர்ம்டுங்க..  ஆசிரியர்களுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு. வாழ்க்கைத் தரமும் சம்பளமும் உயரும். அரசாங்க உத்யோகம் மற்றும் வங்கி வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு ஆஃபர் லெட்டர் வந்துடும் பாருங்களேன். நகைங்களுக்காகவும் ஆடை ஆபரணங்களுக்காகவும்  கொஞ்சம் அதிகமாய்ச் செலவு செய்வீங்க. அதாவது  சீக்கிரத்தில் வீட்டில் ஒரு சுப செலவு இருக்கு. அதுக்குப் பணம் சந்தோஷமாய்ச் செலவு செய்வீங்க.  அம்மாவுக்கும் உங்களுக் கும் சண்டை வராம பார்த்துக்குங்க. அவங்க பக்கம்தான் நியாயம் இருக்கும். கூடிய சீக்கிரம் நீங்க அவங்க கிட்ட சரண்டர் ஆகப்போறீங்க. மனசுக்குள் மம்மிமேல் பாசத்தை கிலோ கணக்கில் வைத்துக் கொண்டிருக் கீங்கதானே. பிறகென்ன பந்தா?

கடகம்

மாணவர்களுக்கு இயன்ற உதவிங்களைச் செய்யுங்க. எனில் அவர்களின் நல்வாழ்த்தும் கிடைக்கும். தயவு செய்து நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை அவங்க உங்களைத் தப்பான பாதைக்கு அழைச்சுக்கிட்டுப்போறாங்கன்னு தோன்றினால் அலர்ட் ஆயிடுங்க. எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிட்டு செயல்படுவீங்க. ஒவ்வொரு நகர்வையும் மிக கவனமாக எடுத்து வைப்பீங்க. வெரிகுட். அந்த ஜாக்கிரதை உணர்வு இருந்துவிட்டால் வேறென்ன வேண்டும்?  ஏகப்பட்ட முயற்சிங்களுக்குப் பிறகு எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். அலுவலகக் காரணங்களுக்காகவும் பர்சனல் ரீசஸ்க்காக வும் நிறையப்  பயணங்கள் மேற்கொள்வீங்க. நீண்ட தொலைவு பயணத்துக்கு திட்டமிடுவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால், மனசில் சந்தோஷம் நிரம்பித் ததும்பும்.

சிம்மம்

கணவன் – மனைவிக்கிடையே நெருக்கமும், சந்தோஷமும், புரிதலும்  அதிகரிக்கும். விருந்து, விசேஷங் களில் பங்கேற்பீங்க. மகிழ்ச்சியான வகையில் பொழுது போகும். குழந்தைங்க பெருமையை அதிகரிக்கச் செய்வாங்க. நல்லவர் யார், கெட்டவர் யார் என்று நல்லாப் புரிஞ்சுக்கிடடு அதற்கப்புறம் அவங்களை நெருங்கிய நண்பராய் நினையுங்க. அது வரைக்கும் சற்றுத் தள்ளியே இருங்க. மனசுவிட்டுப் பேசுகிறேன் என்று ரகசியங்களைப் பகிர வேண்டாங்க. ஜாக்கிரதை. அவங்க அதைத் தப்பா பயன்படுத்த சான்ஸ் இருக்கு. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைத்   திட்டமிட்டு நிறைவேற்றுவீங்க. அதுக்காக அவங்க பாராட்டும், அன்பும் பாசமும் ஒருசேரக் கிடைக்கும். நிறையக் கோவில்களுக்குப் போவீங்க. பல நாள் தள்ளிப்போன நிகழ்ச்சிகள்.. பயணங்கள் இனிதே நிறைவேறும்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 8 முதல் நவம்பர் 10 வரை

கன்னி

அலுவலகத்தில் புதுவகை ஐடியாக்களை செயல்படுத்துவீங்க.  இதுக்காக பாஸ் “வாவ்” என்பார். பலனும் அதிகமாகும். பலநாளா வேற வேலை தேடிக்கிட்டிருந்தீங்க. இப்ப அது அநாயாசமாய்க் கிடைக்கும். ஃபாரின் வேலை கிடைக்கவும் சான்ஸ் இருக்குங்க. வேலை சம்பந்தப்பட்ட எதுவுமே ராக்கெட் வேகத்தில் ஓடும்னு கனவெல்லாம் காணாதீங்க. நிதானமாய்..அதே சமயம் உறுதியா… நிறைவேறும். ஒரேநேரத்தில் பலவேலைங்களை இழுத்துப்போட்டுக்கிட்டுச்  செய்ய வேண்டியிருப்பதால் லேசாய் மனச்சோர்வு அடைவீங்கதான்.  மற்றவர்களின் உதவி கிடைக்கும் என்பதால் சமாளிச்சுடுவீங்க. வேலைப்பளு காரணமாக சாப்பாட்டையெல்லாம் துறக்க வேணாம். ஆமா.. சொல்லிப்புட்டேன். உங்களை ஒழுங்க கவனிச்சுக்கிட்டா நோ பிராப்ளம் வாரம் இது.

சந்திராஷ்டமம் : நவம்பர் 10 முதல் நவம்பர் 13 வரை

துலாம்

நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தலைமை ஏற்றுப் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பிப்பீர்கள். இதுக்காகப் புகழும் பாராட்டும் உங்க அட்ரஸ் தேடி வந்து “கங்கிராட்ஸ்” சொல்லிட்டுப்போகும். அதைக் கவனிப்பதா இதைக் கவனிப்பதா என்று பரபரப்பா செயல்படுவீங்க. அதனால் என்ன.. உங்க இயற்கையான திறமையோ.. கவர்ச்சி அம்சமோ.. எதுவுமே குறையாம உங்களுக்குக் கைகொடுப்பதால் செம செல்வாக்கு இருக்குமுங்க. டோன்ட் ஒர்ரி. எது தவறு எது சரி என்பதை உணர்வீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது நல்லா சிந்திச்சு செயல்படுங்க.  அது போன்ற சமயங்களில் உங்களுக்கு அருமையான நண்பர்கள் உதவி செய்வாங்க.  கணவருக்கு/மனைவிக்கு அதிருஷ்டமான நேரம் இது. பண வரவு அதிகரிக்கும். உறவினர் உதவுவாங்க. குடும்பத்தினர் பக்கபலமாகத் துணை நிற்பாங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 13 முதல் நவம்பர் 15 வரை

விருச்சிகம்

தள்ளிப்போய்க்கொண்டிருந்த திருமணம் சட்டென்று வந்தேவிடும். சகோதர சகோதரிகளுக்கு நன்மை ஏற்படும். அது அனேகமாக உங்களால் ஏற்படும். எதிலும் நிதானப்போக்கு இருந்தாலும் அது இப்பல்லாம் உங்களுக்குப் பழகிடுச்சு என்பதால் பொறுமையை அணிஞ்சுக்குவீங்க. அப்பாவுக்கு உஷ்ணம் சம்பந்த மான  பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. கவனமாய் இருக்கச்சொல்லுங்க. எந்தத் தீர்மானம் எடுத்தாலும் சற்றே கவனமாகக் காலை எடுத்து வையுங்கள். எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம். நிதானமாக யோசித்து முடிவெடுங்க. அதோடு நலம் விரும்பிகள்+ அந்த விஷயத்தில் முன் அனுபவம் உள்ளவங்க கிட்ட அட்வைஸ் கேட்டு டிசைட் செய்ங்க. மேலும் உங்களின் குடும்ப ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பிச்சு, இந்த முடிவு எடுக்கலாமா வேண்டாமா என்று கன்சல்ட் செய்ங்க. பிறகென்ன! ஜமாயுங்க.  

தனுசு

கல்வித்துறையில் உள்ளவங்களுக்கு மெகா ஜாக்பாட் அடிச்ச மாதிரி நன்மைகள் வந்து குவியுங்க. வார மத்தியில் எந்த வம்புக்கும் போகாமல், யாரைப் பற்றியும் யாரிடமும் விமர்சனம் செய்யாமல் கம்முனு இருங்க. குழந்தைகளுக்கோ, கணவருக்கோ/ மனைவிக்கோ, தந்தைக்கோ இத்தனை காலம் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாகி  நிம்மதி பிறக்கும். நீங்க திருமணம் ஆகாதவரா இருந்தால் உடனடியா ஃபிக்ஸ் ஆகும். சந்தோஷ செலவுங்க உண்டு. முரட்டுத் தனம், பொறுமையின்மை ஆகிய விஷயங்கள் உங்களை அண்டாமல் பார்த்துக்குங்க. பணியிடங்கள் மற்றும் நீங்க வசிக்கும் இடங்களில்.. அண்ட் உறவினர் மத்தியில்  உங்களின் மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எதுவானாலும் அவற்றிலெல்லாம் வெற்றி பெறுவீர்கள், மகிழ்ச்சியான வாரம் இது.

மகரம்

நீங்க பெற்ற ரத்தினங்களின் கல்விக்காக நிறையச் செலவுகள் செய்ய வேண்டி வரும். அதெல்லாம் செலவு இல்லைங்க. முதலீடு.  மம்மிக்கு. சில சிகிச்சைகள் எடுக்க வேண்டி வரலாம்.  ஆனால் தகுந்த நேரத்தில் தாமதமின்றி அவங்களுடைய ஆரோக்யத்தைப் பாதுகாத்துக்கொள்வீர்கள். தாயாருக்கும் தந்தைக்கும் பணியிடங்களில்  நன்மைகள் அதிகரிக்கும். அவரால் உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். உங்களால் அவங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் கிடைக்கும். சகோதர சகோதரிகளுடன்  சிறு பிரச்சினைகள் ஏற்பட்டால் தூங்காமல் கவலைப்பட்டு மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டாம். நீங்க டென்ஷன் ஆகும் அளவு பெரிய பிரச்சினையெல்லாம் இல்லை அது. தானாய்ச் சரியாகும். சூப்பர் செலவுங்க இருக்கு. குடும்பத்தில் திருமணம் காரணமாய் உறவினர் வருவாங்க.

கும்பம்

நல்ல செலவுகள் நிறைய இருக்கும். பயம் வேண்டாம். அந்தச்  செலவை மிஞ்சும் அளவுக்கு நல்ல வரவும் உண்டுங்க. ஆரோக்யத்தை சற்றுப் புறக்கணித்து சாப்பாட்டு விஷயத்தில் ரிஸ்க் எடுக்கிறீர்கள். வேண்டாம். மிகவும் கவனமாக சாப்பிட வேண்டிய சமயம் இது. சுருங்கச் சொன்னல் … வயிறு சம்பந்தப்பட்ட ஆரோக் யத்தில்  கவனமாய் இருங்க. காலம் தவறாமல், ஆரோக்யமான உணவை… சுத்தமான மற்றும் சுகாதாரண மான இடத்தில் சாப்பிடுங்க. உங்க அப்பா அல்லது அம்மாவின் புத்திசாலித்தனமான நடவடிக்கையால் குடும்பம் சிரமத்திலிருந்து அல்லது ஆபத்திலிருந்து தப்பும். உறவினர் மற்றும் நண்பர்களிடையே மத்தியஸ்தம் செய்வீங்க. திட்டுவாங்க என்று நினைத்தவர்கள்கூடப் புகழுவாங்க. ஆன மொத்தத்தில் நல்ல பெயர் எடுப்பீங்க.  புது வேலை கிடைக்கும். நினைச்சுப் பார்க்க முடியாத சம்பளமும் கிடைக்கும்.

மீனம்

தாயாருக்காக அல்லது தாய் வழி உறவினருக்காக நல்ல வகையில் செலவு செய்து அவரின் நல்லாசியைப் பெறுவீங்க. வீடு வாங்குவீங்க. அல்லது உங்க குழந்தைங்க வீடு / ஃப்ளாட் வாங்குவாங்க. குடும்பத்திலோ அல்லது அலுவலகத்திலோ ஏற்படும் சில்லறைக் குழப்பங்களும் பிரச்சினைகளும் உங்க அமைதியான அணுகுமுறையால் சரியாகிவிடும். அருமையாய் டீல்  செய்து முதலாளிகளின் பாராட்டுக்கு ஆளாவீங்க. ஆனால் அலுவலக விஷயங்களில் எதையும் நிதானத்துடன்… பக்குவமாகச் செய் வேண்டும் என்பதை நொடிக்கு நொடி நினைவில் வெச்சுக்குங்க. நிறையச் செலவுகள் இருந்தாலும் எல்லாமே நல்ல நல்ல செலவுகளாகவும் சுப செலவுகளாகவுமே இருக்கும். உழைப்பும் ஓட்டமும் கொஞ்சம் அதிகமாகத்தாங்க இருக்கும்.