வார ராசிபலன்: 1.11.2019 முதல் 7.11.2019 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்  

உங்க மகனுக்கு அல்லது மகளுக்கு இத்தனை காலமாய் இருந்துக்கிட்டிருந்த தப்பான பழக்க வழக்கங்கள் விலகும். உங்களுக்கோ மனைவிக்கோ (கணவருக்கோ) வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.  குடும்பத்தில்  அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கும். விருந்தினர், உறவினர் வருவாங்க. இதனால உங்க வீடு களைக்கட்டும். நீங்க அரசியல்வாதி என்றால் தயவு செய்து  அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தராதீங்க. மாணவர்கள் உயர்கல்வியைச் சற்றுப் போராடிடித்தான் முடிப்பீங்க. எனினும் முடிச்சுடுவீங்களே.  தயவு செய்து விளையாட்டின் போது கவனமாய் இருங்க. வெளிநாட்டுக் கல்விக்காக  அங்குள்ள பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சேரப் போறீங்க என்றால் விரும்பிய பாடப்பிரிவில் சேர கொஞ்சம் போராட வேண்டியிருக்கும். பட் .. கடைசியில் வெற்றிதான் உங்களுக்கு.

ரிஷபம்

நீங்க பிசினஸ் செய்பவர் என்றால் வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தை அதிகரிக்க முற்படுவீங்க. மற்றவங்களை நம்பி அனுபவமில்லாத தொழிலில் ஈடுபடவே வேணாங்க. ப்ளீஸ். உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன்.  வேலையாட்கள் அல்லது உங்க கீழ் அலுவலகத்தில் வேலை பார்க்கறவங்க  உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டால் அதுக்கெல்லாம் டென்ஷனாகாதீங்க. ஜஸ்ட் கண்டுக்காம போங்க.  உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு. சற்றே பொறுமையுடன் ஏத்துக்குங்க.  பிற்காலத்தில் இதனால் நன்மை ஏற்படுங்க. உங்க கூட வேலை பார்க்கறவங்க அல்லது உங்களுக்குக் கீழே வேலை பார்க்கறவங்களோட சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். குறிப்பா மத்யஸ்தம் நாட்டாமை செய்தல் எதுவும்  வேணாம. இங்கிதமானப் பேச்சாலும்கூட மற்றவர்களுக்கு அட்வைஸ் கிட்வைஸ் பண்ணிடாதீங்க

சந்திராஷ்டமம்: அக்டோபர் 31 முதல் நவம்பர் 3 வரை

மிதுனம்

உங்களின் நீண்ட கால எண்ணங்கள் அல்லது கனவுகள்.. ஆல் ஆசைகள் நிறைவேறும். பலப்பல காலமாகத் தடைப்பட்ட காரியங்கள் மற்றும் நீங்கள் பெண்டிங்கில் போட்டிருந்த அனைத்து விஷயங்களும் ஒன்று மாற்றி ஒன்று முடிவடையும். நீங்களே சர்ப்பிரைஸ் ஆயிடுவீங்க. இத்தனை நாளாய் இருந்து வந்த ஆரோக்யப் பிரச்சினைகள் .. எஸ்பெஷலி காது, தொண்டை வலியெல்லாம்  காணாமல் போகும். வீடு கட்டுவதற்கு குறைந்த வட்டியில் நீங்க எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீங்க. பழுதான எலக்ட்டிரானிக் மற்றும் எலக்ட்ரிகல்  சாதனங்களை மாத்துவீங்க.  உங்க செல்வாக்குக் கூடும். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். தந்தைவழியில் வர வேண்டிய தொகையும் வரும்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 3 முதல் நவம்பர் 5 வரை

கடகம்

பூர்வீக சொத்துப் பிரச்னை ஏதும் உங்க குடும்பத்தில் ஓடிக்கிட்டிருக்கா? அப்படியானால் அதுக்கு தீர்வு கிட்டும். பாகப்பிரிவினையும் நல்ல விதத்தில் முடியும். அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் (பங்காளிகளுடன் நல்ல விதமாக!)  பழைய நண்பர்கள் உதவுவார்கள். எனவே வாழ்வில் முன்னேறுவீங்க. புது நண்பர்கள் அறிமுகமாவாங்க. அதனால் அவங்களாலயும் எதிர்கால நன்மை உண்டுங்க. நீங்க எடுக்கும் முயற்சிங்க எதிலும் வெற்றியே கிட்டும். ஆனால் அதற்காக சற்று அதிகம் உழைக்கவும் முயற்சி செய்யவும்.. பலரைச் சந்திக்கவும் வேண்டியிருக்கும்.  புகழ், செல்வாக்கு இன்கிரீஸ் ஆகுங்க . பிரதர்கள் மற்றும் சிஸ்டர்களின்  ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன்கள் மடவென்று அடையும் (நீங்க வாங்கின கடனானாலும் கொடுத்த கடனானாலும்).

சந்திராஷ்டமம்: நவம்பர் 5 முதல் நவம்பர் 8 வரை

சிம்மம்

பணவரவு நல்லபடியா இருக்குமுங்க. குடும்பத்தில் உள்ளவங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீங்க. இதனால சந்தோஷமான சூழல் நிலவும். குடும்ப ஒற்றுமை மனசுக்கு நிம்மதியும் தரும். ஆஃபீசில் புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீங்க. வி.ஐ.பிகளை சந்திப்பீங்க. நண்பர்கள் மற்றும் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நீங்களும் சந்தோஷப்பட்டு அவங்களையும் சந்தோஷப்படுவீங்க.  உடன் பிறந்த அண்ணா மற்றும் அக்கா ஆகியவங்களோட உதவிகள் கிடைக்கும். ஃபாரின் செல்ல விசா கிடைக்கும். தன தான்யம் ..அதாவது செல்வம் அதிகரிக்கும். உங்களோட வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களுடைய செல்வாக்கு வீட்டிலும் உயரும். அலுவலகத்திலும் உயரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கமும் பாசமும் அதிகரிக்கும்.  குழந்தைங்க உங்க வயிற்றில் மில்க் வார்ப்பாங்க.

கன்னி

அரசியல்வாதிகளா நீங்க.. சந்தோஷப்படுங்க..  தலைமையில் உள்ளவங்களுக்குக்கூட ஆலோசனை சொல்லும் அளவிற்கு நெருக்கமாயிடுவீங்க. கன்னிப் பெண்களுக்குக் கல்யாணம் ஆகும். அட்லீஸ்ட் நிச்சயமாகவது நடக்கும்.  உயர்கல்வி சூப்பராச் சிறக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உங்களுக்கே உங்களைப் பார்த்து ஆச்சர்யமாக இருக்கும். உங்க தனித்திறன் மேம்படும். எந்த விஷயத்தையும் அறிவுபூர்வமாக ஆராய்ந்து செயல்படுவீங்க. உங்கள் குல தெய்வத்தை தரிசயம் செய்வீங்க. இதனால உங்களுக்கு மனசில் ஏற்படும்  சக்தியும் தன்னம்பிக்கையும்  உங்கபிரச்னைகளை தீர்க்கவும், வாழ்வில் முன்னேறவும் ஹெல்ப்  செய்யும். பூர்வீக சொத்து பிரச்னைகள் உங்களுக்கு அல்லது உங்க குடும்பத்துக்கே சாதகமாக அமையும்.

துலாம்

உங்க அறிவுத்திறன் வெளிப்படும். குழந்தைங்களால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். தாய் மற்றும் சகோதர சகோதரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புதிய வீடு, நில, புலன்கள், ஃப்ளாட்…  வாங்குவதற்கான முயற்சிகள் எல்லாம் நல்லபடியா முடியுங்க. குடும்ப  விஷயங்களில் வழக்கத்தைவிடக் கொஞ்சம் அதிகக் கவனம் தேவைங்க. வீடு கட்டவோ.. கார் வாங்கவோ.. கடன் வாங்கும் சூழல் ஏற்பட வாய்ப்பிருக்குங்க.  நண்பர்களோ.. உறவினர்களோ.. அல்லது அலுவலகத்தில் உங்ககூட வேலை பார்க்கறவங்களோ.. யார்கூடவும் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.  உங்க மனசில் தைரியமும், உற்சாகமும் அதிரிக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். “பார்த்துடலாமே ஒரு கை. என்ன பெரிசா ஆயிடப்போகுது..” என்று சமாளிச்சுடுவீங்க.

விருச்சிகம்

உங்கள் விடாமுயற்சி வெற்றி பெறும். வெளியூர் அல்லது வெளிநாட்டுப்  பயணங்களால் ஆதாயம் உண்டு. எஸ்பெஷலி அலுவலகம் சம்பந்தமான பயணம்னா முழு வெற்றி.  ரொம்ப காலமாய்  எதிர்பார்த்த வங்கி கடன் கைக்கு கிடைக்கும். வேலையில் இருப்பவங்களா நீங்க? எனில் பணியில் உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். இருப்பினும் சக பணியாளர்களுடன் சங்கடங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடுகள் வந்தாலும்கூட அது உங்க முயற்சியால் முழுசாக நீங்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து அது சீக்கிரத்தில் நீங்கும். டாடியின்  உடல் நலன் சிறிய அளவில் பாதிப்படையும் என்பதால் கொஞ்சம் அதிகக் கவனம் தேவைங்க. மற்றவர்களின் தவறான ஆலோசனையைக் காது கொடுத்துக் கேட்கவே கேட்காதீங்க. அவங்க சொற்படி நடந்தால் பிரச்னை உருவாகலாம்.

தனுசு

இத்தனை காலமாய் ஏற்பட்டுக்கிட்டிருந்த தடைகளையும் தாண்டி நீங்க முன்னேறுவீங்க. நல்லா யோசிச்சு பழைய சிக்கல்களுக்கு  அருமையாய்த் தீர்வு காண்பீர்கள். நான் சொல்றது அலுவலகத்தில் மட்டு மில்லீங்க.. குடும்பப் பிரச்சினைங்களுக்கும்தான்.  வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பெரிய துறைகளில் உள்ள பிரபலமானவங்க அநாயாசமா உங்ககூட ஃப்ரெண்டா ஆயிடுவாங்க. சோஷியல் மீடியா வாழ்க. கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். பல காலமாய் மண்டைக் குடைச்சலைக் குடுத்துக்கிட்டிருந்த வாகனப் பழுதை ஒரு வழியா சரி செய்வீர்கள். நிறை……….யப் பணவரவு உண்டு. கடன்களையெல்லாம் திருப்பித் தந்து முடிப்பீங்க. மகன் அல்லது மகள்  அயல்நாடு சென்று உயர்கல்விப் பெற விசா கிடைக்கும்.

மகரம்

மனசில் இத்தனை காலமாய் இருந்துக்கிட்டிருந்த தாழ்வு மனப்பான்மை விலகும். வீண் விவாதங்களை யெல்லாம் தவிர்ப்பீர்கள். குடும்பத்திலேயும்  உங்களுக்கு முக்கியத்துவம் கிடைச்சுடும். அலுவலகத்திலும் சரி குடும்பத்திலும் சரி உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மருந்துக்காக நீங்க இத்தனை காலமாய்ச் செய்துக்கிட்டிருந்த செலவு கணிசமாகக் குறையும். உங்களுக்கு மட்டுமில்லாமல் குடும்பத்தில் உள்ளவங்களுக்கும் ஆரோக்யம் நல்லபடியா ஆயிடும். சகோதரர்கள் அண்ட் சகோதரிங்க கிட்டேயிருந்து நீங்க எதிர்பார்த்துக்கிட்டிருந்த  உதவி கிடைக்கும். பங்காளிப் பிரச்னை தீர்வுக்கு வரும். உங்களுக்கே பிடிக்காமல் உங்க தலைமேல உட்கார்ந்துக்கிட்டிருந்த கோபம் விலகும்.

கும்பம்

ஒரு விஷயத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லதுங்க. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில்ல குழப்பநிலை இருந்தாலும் நல்ல விதமான முன்னேற்றம் உண்டு.எதிர்பாராத அதிர்ஷ்டம்கூட உண்டு. குழந்தைங்க லைஃப்ல நன்மைகள் நடக்கும். வேலை பார்க்கும் இடத்தில் சக்கையாய்ப் பிழிவாங்க. வெயிட். கூடிய சீக்கிரத்தில் உங்களை அவங்க வெளிநாட்டுக்கு  அனுப்பும்போது சூப்பரா நன்மைகள் வருமுங்க. குழந்தைங்களைப் பற்றி சதா கவலைப்பட்டுக்கிட்டிருந்தீங்களே.. இப்ப பாருங்க. அவங்க வாழ்க்கையில் எவ்ளோ பெரிய நன்மை ஏற்பட்டு உங்களை சந்தோஷப்படுத்திட்டாங்க பாருங்க. அதுக்குத்தான் பொறுமையா வெயிட் செய்யணும்னு சொல்றது. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு  மெல்ல மெல்ல மாறும். ஹாப்பி?

மீனம்

வேலைச்சுமை நிறையவே குறையும். ரொம்பக் காலமாய்த் தள்ளிப் போயிக்கிட்டிருந்த சில காரியங்கள் உடனடியா முடியும்ங்க. அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள்.. குறிப்பா நீங்க எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருந்த விஷயங்கள்  உடனே முடியும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீங்க. அதை மட்டும் சற்று மாத்திக்குங்களேன், ப்ளீஸ். இத்தனை காலமாய்ப் புழங்கி வந்த உங்களைப் பற்றிய வதந்திகள் ஒரு வழியாய் ஃபுல்ஸ்டாப் வைச்சுக்கும். நெருங்கிப் பழகிய ஒரு சிலர் திடீரென்று பார்த்தும் பார்க்காமலும் செல்வார்கள். டோன்ட் ஒர்ரி. டோன்ட்டே  ஒர்ரி.. அவங்களா வலிய வருவாங்க. அப்ப பார்த்துக்கலாம். அப்பகூட வெச்சு செய் வேணாங்க. பாவம் . விட்ருங்க. பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு  அல்லது மகனுக்குத் திருமணப் பேச்சு நடந்து நல்ல வரன் அமையும்.

More articles

Latest article