வாரராசிபலன்: 6.12.2019  முதல்  12.12.2019 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்   

தன்னம்பிக்கையின் மூலமாக காரியங்களில் வெற்றி கொள்ளுவீங்க! நீங்கள் என்ன செய்தா லும் அதனுடைய ரிசல்ட்டாக சுப பலன் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றத்தை பெறுவதற்கு முயற்சிகள் செய்வீர்கள். உங்க தன்னம்பிக்கையும் .. தைரியமும்.. விடா முயற்சியும் பண வரவையும் லாபத்தையும் அதிகப்படுத்தும். தொழில், உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீங்க. வெளியில் ஜாலியாய்ச் சுத்துவீங்க. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான விஷயங்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற் றுமை குறையும். விருந்து, பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க.  எஸ்பெஷலி டாடியுடன் மிக நல்ல உறவு தொடரும். சண்டைக்கெல்லாம் ஃபுல்ஸ்டாப் வெச்சு அப்பாகூட ராசியாயிடுவீங்க. ஹாப்பிதானே?   

ரிஷபம்

எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். எனினும் அதற்கான பலன் உடனடியாய்ய்க கிடைக்கலைன்னா புலம்பாதீங்க.  கலைத்துறையினருக்கு நிச்சயமாய் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். ஆனாலும் கடுமையான உழைப்பு மற்றும் உழைப்புக்குப் பிறகே அது சாத்தியம். நல்ல வேளையாய் எதையும் லைட்டாய், ஜாலியாய் எடுத்துப்பீங்க.  அடுத்தவங்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டு வீர்கள். குறிப்பாய் சூப்பர் சமூக சேவை செய்வீங்க. அரசியல்துறையில் உள்ளவங்க சற்றே கேர்ஃபுல்லா இருந்துக்குங்கப்பா/ ம்மா.. கோபத்தினால் சின்னச்சின்ன சண்டைகள் ஏற்பட வாய்ப்பிருக்கு. பணவரவு நிச்சயம் கூடும். காரியங்கள் நல்லபடியா முடியும்.

மிதுனம்

மாணவர்களுக்கு இத்தனை காலமாய் இருந்து வந்த மந்த நிலை மெல்ல  மெல்ல மாறும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இவ்ளோ காலமாய்த் தாமதம் இருந்தது அல்லவா. அது மாறி இனி ஒருவித வேகம் காணப்படும்.மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். முன் எப்போதையும்விடப் பாடத்தில் நாட்டம் உண்டாகும்.விளையாட்டு மற்றும்  போட்டிகளில் நீங்க ஈடுபட்டால் அதில்  சாதகமாக  பலன் தரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். அவங்களும் உங்களுக்கு நிறைய உதவி செய்வாங்க. வாரத்தின் முன்பகுதி சுமாராக இருந்தாலும், பிற்பகுதியில் நீங்கள் ஈடுபடும் காரியங்கள் எல்லாமே சூப்பர் வெற்றி பெறுமுங்க. பணவரவு கூடுமே தவிரக் குறையாமல் சீராக இருக்கும். அலுவலகவாசிகளுக்கு வாழ்வின் முன்னேற்றத்தில் எந்தத் தடையும் இருக்காது. விவேக் ஸ்டைலில் சொல்வதானால் டோன்ட் ஒர்ரி .. பி ஹாப்பி.

கடகம்

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக சான்ஸ் உள்ளது என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லதுங்க. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி விட்டால் அதற்கு நல்ல பலன் இருக்கும். குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லதுங்க. தேவையில்லாத ஃபைட்டிங்கெல்லாம் வேண்டாம்.  அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்ட போகும் வாரம் இதுதாங்க. கரெக்டாய்ப் பயன்படுத்திக் கிறது உங்க கையில்தான் இருக்கு. ஆமாம். சொல்லிட்டேன். எடுத்த செயலை நல்லபடியாக வும் வெற்றிகரமாகவும் முடிப்பீர்கள். சும்மா இல்லைங்களே.. ஏராளமான உழைப்பும் முயற்சியும் இன்புட் செய்யறீங்களே.  பணவரவு ஒரேயடியாய் அபரிமிதாய்ப் பொழியாது என்றாலும் குறைவின்றி எப்போதும்போல் உள்ள அளவுக்கு சீராக இருக்கும்.

சிம்மம்

சிலருக்குப் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. அதற்குப் பணம் ஏற்பாடு செய்வது முதலில் சிரமமாக இருந்தாலும் பிறகு சுலபமாய்ச் சமாளிக்கும்படிதான் இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். டோன்ட் ஒர்ரி. அப்படிச் செலுத்திவிட்டால் நல்ல பலன் உறுதியாய்க்கிடைக்கும். குடும்பத்திலுள்ள பெண்களுக்கு கணவரின் அன்பும், கணவர் வழி உறவினால் நன்மைகள் ஏற்படும். மேலும் குழந்தை எதிர்பார்த்திருந்தவங்களுக்கும், திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தவங்களுக்கும் கட்டாயமாய் நல்ல பலன் உண்டுங்க. குழந்தைங் களுக்கு நன்மைகள் மற்றும சுப நிகழ்ச்சிகள் நல்லபடியாய் நடக்கும். கற்பனை பயங்கள் வேண்டாம். அதிக நம்பிக்கை வைத்து பர்சனல் விஷயங்களை யாரிடமும் உளறாதீங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 5 முதல் டிசம்பர் 7 வரை

கன்னி

உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதுங்க. எந்த முயற்சி எடுத்தாலும் அதில் விரைவான வெற்றிகள் கிடைக்கும். குறிப்பாய்த் தாயாருக்காக நீங்கள் எடுத்த முயற்சிகள் மற்றும் அவங்க அலுவலகத்தில் அவங்க எடுத்த முயற்சிகள் எல்லாம் டக் டக்கென்று நிறைவேறி சந்தோஷம் கொடுக்கும். திடீர்னு ஒரு உத்வேகம் ஏற்பட்டு எதையும் சாதிக்க வேண்டும் என்ற முயற்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும். வாரத்தின் பிற்பகுதியில் ஓரிரண்டு சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.  உறவினர்களிடையே வாக்குவாதம் வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ள பெண்களுக்குப் பல வகையிலும் முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 7 முதல் டிசம்பர் 10 வரை

துலாம்

நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளிலும் மற்றும் முயற்சியிலும்  பொறுமையைக் கடைபிடிப்பது ரொம்பவும் அவசியமுங்க. . குடும்பத்தில் ஓரிரண்டு சிறுசிறு பிரச்சினைகள் வரக்கூடும். அதையெல்லாம் பெரிசுபடுத்தி  சண்டையாக்காமல் குடும்ப உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லதுங்க. அப்படிச் செய்துட்டீங்கன்னா பிரச்சினையே வராது. பணவரவு சீராக இருக்கும். கணவன் மனைவியிடையே நெருக்கம் உண்டாகும். இத்தனை காலம் உங்களுக்கிடையில் பிரச்சினை ஏற்படுத்திக்கிட்டிருந்தவங்க ஓடி ஒளிவாங்க. மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாகவே அமையும். தொலைந்து போன நகைங்க கிடைக்கும்.

சந்திராஷ்டமம் :  டிசம்பர் 10 முதல் டிசம்பர் 12 வரை

விருச்சிகம்

மகிழ்ச்சியான வாரமாகத்தான் உங்களுக்கு இந்த வாரம் அமையும். ஆனாலும் எதையுமே கடுமையாக முயற்சி செய்து சாதிக்க வேண்டிய கட்டாயமும் டென்ஷனும் இருப்பதை உங்களால் அவாயிட் செய்ய முடியாதுங்க. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமுங்க. உங்கள் முயற்சிகள் எல்லாமே வெற்றி பெறும். எதிர்பார்த்த அளவு பணவரவு இருக்க வாய்ப்பில்லை. திருமண முயற்சிகள் ஒரு வழியாய்ச் சாதகமாக அமையும். வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கு நிறைய வாய்ப்பு உள்ளதுங்க. கடந்த சில வாரங்களாக டென்ஷன் குடுத்துக் கிட்டிருந்த உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களுக்குப் படிப்பில் சற்றே அதிக ஆர்வம் தேவைங்க. அது மட்டும் இருந்துட்டா ஜமாய்க்கலாம். 

தனுசு

பெண்கள் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி சந்தோஷப்படுவீங்க. ஸ்வீட் எடு கொண்டா டுன்னு மனசு மகிழ்ச்சியில் துள்ளும். இருந்து சின்னச்சின்ன டென்ஷன்ஸ் இருக்கவே செய்யும். அதையெல்லாம் பொருட்படுத்தாத அளவுக்கு ஹாப்பியா இருப்பீங்க.  குடும்பத்தில் உள்ளவங்களுக்கு  சுப நிகழ்ச்சி நடக்கும். குறிப்பாய்க் குழந்தைங்களுக்கு நன்மை உண் டாகும். அவங்க படிப்பு.. உத்யோகம் எல்லா விஷயங்களிலும் நல்லது நடக்கும். கணவர் / மனைவிக்கு அலுவலகத்தில் பெரிய நன்மை ஒன்று காத்திருக்கு. குறிப்பாய் வெளிநாடு சம்பந்தப்பட்ட நன்மையா அது இருக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அதற்கான லோன் சுலபமாய்க் கிடைக்கும். எதையும் நிறைய முயற்சி செய்து சாதித்தாலும் பெஸ்ட் முறையில் மன மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும்படியான சாதனையாவே அது அமையும். 

மகரம்

கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும்தான். அதுக்காக மனசைப் போட்டுக் குழப்பிக்காதீங்க. தன்னால் சரியாகும். அந்தப் பிரச்சினை அதிகமாகாமல் மட்டும் பார்த்துக்குங்க. போதும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தத்தாங்க வேணும். வேற வழியே இல்லை.  குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் சற்று சிரமம் இருக்கும் பொறுமையாக இருப்பது நல்லது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யாரையும் தூக்கி அடிக்காதீங்க. அவங்க தயவு அடுத்த நாளே தேவையா இருக்கும். மனதுக்குப் பிடித்த.. நெருங்கிய உறவினர்கள் வருகையால் மனசில் சந்தோஷம் நிலவும். சில காலத்துக்குப் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரப் போறீங்க. படிப்பில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்தியே ஆகவேண்டும்.

கும்பம்

பணவரவு அதிமாகப் போகுதுங்க. அதுக்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் குருட்டு அதிருஷ்டத் தால் பண மழை பொழியும் என்று மட்டும் எதிர்பார்க்காதீங்க.  நல்லா உழைச்சு  சம்பாதிப் பீங்க. நீங்கதான் என்றைக்கும் உழைப்புக்கு அஞ்சவே மாட்டீங்களே. பழைய சண்டைகள் தீர்ந்துபோய்க் கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படுவது மட்டும் இல்லைங்க. ஒருத்தரால் ஒருத்தருக்கு நன்மையும் லாபமும்கூட உண்டாகும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகமும் உண்டு. புதிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகமாக இருக்கும். குடும்பத் தலைவிகளுக்கு, கணவனிடம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவாக முடியுமுங்க.  பதவியும் சம்பளமும் அலுவலகத்தில் உயரும். அதைவிட .. கௌரவமும்.

மீனம்

நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு  காரியத்திலும் கொஞ்சமாச்சும் பொறுமையுடன் செயல்படுவது நல்லதுங்க. ஒரு முறைக்கு பல முறை யோசித்துத்தான் நீங்க முடிவு எடுக்க வேண்டும். இதை மறக்கவே மறக்காதீங்க. யாரையும் தூக்கிஅடிக்காதீங்க. குறிப்பா  நீங்க மதிச்சு நடக்கவேண்டியவங்களை சற்றும் குறைவாய் நடத்தவே செய்யாதீங்க. ப்ளீஸ். அலுவலகத்திலும், உறவினர்களிடையேயும் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாங்க. குடும்பத்தில் கணவர் அல்லது மனைவியின் பேச்சைக்  கேட்டு நடப்பது நல்லதுங்க. மாண வர்கள் கொஞ்சம் லேசாக் கஷ்டப்பட்டால் போதும்.  நல்ல ரிசல்ட் வரும். ஆனால்  முயற்சியே எடுக்காமல் பலனை அனுபவிக்கலாம்னு தயவு செய்து எதிர்பார்க்கவே செய்யாதீங்க.  பெண்களுக்கு சற்று சிரமம் தரும் வாரமாக இருக்கும் என்றாலும்கூடப் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை.

More articles

Latest article